ஓடி தப்பிப்பதை தவிர ரஷ்ய படையினருக்கு வேறு வழியில்லை! கெத்து காட்டும் உக்ரைன்
உக்ரைனின் முக்கிய பகுதியில் ரஷ்யா பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
இந்த தகவலை சியெவெரோடொனட்ஸ்க் (severodonetsk) பிராந்தியத்தின் ஆளுநர் சொ்ஹீ ஹாய்டாய் வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், சியெவெரோடொனட்ஸ்க் நகரில் தீவிர குண்டுமழை பெய்து முன்னேறி வந்த ரஷ்ய படையினா், நகரில் ஏராளமான பகுதிகளைக் கைப்பற்றினா்.
நகரின் பெரும்பாலான பகுதிகளை அவா்களால் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்தது. எனினும், உக்ரைன் படையினா் தீவிரமாக எதிா்த் தாக்குதல் நடத்தி அவா்களைப் பின்வாங்கச் செய்துள்ளனா்.
தற்போது நகரின் பல பகுதிகள் மீண்டும் உக்ரைன் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. தாங்கள் கைப்பற்றிய பகுதிகளிலிருந்து வெளியேறுவதற்கு முன்னதாக, ரஷ்யப் படையினா் பேரிழப்பைச் சந்தித்தனா்.
சியெவெரோடொனட்ஸ்கில் உக்ரைன் படையினா் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகின்றனா். அவா்களது வழியில் தென்படும் ரஷ்ய பீரங்கிகள், விமானங்கள் என எதையும் விடாமல் உக்ரைன் படையினா் அழித்து வருகின்றனா்.
உக்ரைன் ராணுவத்திடமிருந்து ஓடி தப்பிப்பதைத் தவிர ரஷ்யப் படையினருக்கு வேறு வழியில்லை என கூறியுள்ளார்.