திருமணத்திற்கு புறம்பான கர்ப்பம்: பெண்களுக்கு கடும் தண்டனை! பிரபல நாட்டில் புதிய சட்டம்
ஆண்களின் ஆடைகளை அணிந்தால் பெண்களை தண்டிக்க மலேசிய அரசு புதிய சட்டத்தை அமுல்படுத்தவுள்ளது.
மலேசியாவின் வடகிழக்கு தெரெங்கானு மாநில அரசு, ஆண்களின் ஆடைகளை அணிவதற்காகவும், திருமணத்திற்குப் புறம்பான கர்ப்பங்களை கருத்தரிப்பதற்காகவும் பெண்களை தண்டிக்கவுள்ளது.
'சூனியம் மற்றும் மந்திரவாதம்' ஆகியவற்றையும் அரசு தடை செய்கிறது.
இந்த மாத தொடக்கத்தில் தெரெங்கானு மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் 5,000 ரிங்கிட் ($1,134) வரை அபராதம், மூன்று ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ஆறு கசையடிகள் அல்லது மூன்றின் கலவையுடன் கூடிய தண்டனைகளுக்கான சட்ட விதிகளை உருவாக்குகின்றன.
AFP
இந்த நடவடிக்கை தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களின் கோபத்தை ஈர்த்துள்ளது.
அனைத்து மகளிர் நடவடிக்கைச் சங்கம் உட்பட 14 உரிமைக் குழுக்கள், சட்டமன்ற மாற்றங்கள் கருத்துச் சுதந்திரம், சமத்துவம் மற்றும் பாகுபாடு காட்டாத உரிமையை மீறுவதாகக் கூறியுள்ளன.
தெரெங்கானு மாநிலம் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை மையமாகக் கொண்ட பார்ட்டி இஸ்லாம் செ-மலேசியா கட்சியால் ஆளப்படுகிறது.
இந்த புதிய சட்டம், அண்டை நாடான இந்தோனேசியாவின் நடவடிக்கையைப் பின்பற்றுகிறது. அங்கு திருமணத்திற்குப் புறம்பான உடலுறவை சட்டவிரோதமானது மற்றும் கருக்கலைப்புக்கு தண்டனை விதிக்கப்படுகிறது.