வெள்ளிகிழமை தொழுகை செய்யாத ஆண்களுக்கு சிறை - ஆசிய நாடொன்றில் புதிய சட்டம்
வெள்ளிகிழமை தொழுகை செய்யாத ஆண்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்போவதாக ஆசிய நாடு ஒன்று அறிவித்துள்ளது.
தொழுகை செய்யாத ஆண்களுக்கு சிறை
தென் கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில் உள்ள தெரங்கானு Terengganu மாநிலத்தில், பான் - மலேசிய இஸ்லாமிய கட்சி ஆட்சி(PAS) செய்து வருகிறது.
இந்நிலையில், நியாயமான காரணங்கள் இன்றி வெள்ளிக்கிழமை தொழுகையை தவிர்க்கும் ஆண்களுக்கு, 2 ஆண்டுகள் சிறை அல்லது 3,000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை தொழுகை என்பது வெறும் மத அடையாளம் மட்டும் அல்ல, இஸ்லாமியர்களிடையே கீழ்ப்படித்தலின் விளைவாக இருக்கிறது என்பதை நினைவூட்டுவதே இந்த சட்டத்தின் நோக்கம் என மாநில தகவல் மற்றும் ஷரியா அதிகாரமளிப்பு அமைச்சர் முஹம்மது கலீல் அப்துல் ஹாடி தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை பன்முக கலாச்சாரம் கொண்ட மலேசியா, மத பழமைவாதத்தை நோக்கி செல்வதாக விமர்சனம் செய்துள்ளனர்.
முன்னதாக, தெரங்கானு மாநிலத்தில் தொடர்ச்சியாக 3 வெள்ளிக்கிழமை தொழுகையை தவற விடுபவர்களுக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டது.
தெரங்கானு, மலேசியாவின் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி இல்லாத ஒரே மாநிலமாகும். 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், ஆளும் பான் - மலேசிய இஸ்லாமிய கட்சி மொத்தமுள்ள 32 இடங்களிலும் வெற்றி பெற்றது.
1.2 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்த மாநிலத்தில், 97 சதவீத மக்கள் இஸ்லாமியர்கள் ஆவார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |