239 பேருடன் காணாமல் போன MH370 விமானம் - 11 ஆண்டுகளுக்கு முன் மாயமானதை தேடும் மலேசியா
239 பேருடன் காணாமல் போன MH370 விமானத்தை தேடும் பணியை மீண்டும் மலேசியா தொடங்க உள்ளது.
239 பேருடன் மாயமான MH370 விமானம்
கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகரான பெய்ஜிங்க்கு MH370 விமானம் வழக்கம் போல் இரவு நேரத்தில் புறப்பட்டது.

227 பயணிகளையும் 12 விமானப் பணியாளர்களையும் ஏற்றிக் கொண்டு பறந்த அந்த விமானம், புறப்பட்ட ஒரு மணிநேரத்தில், தென் சீனா கடலின் மேற் பரப்பில் பறந்த பின்னர் ரேடாரின் கண்காணிப்பில் இருந்து காணாமல் போனது.
இந்த விமானம் கடலில் விழுந்து விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று சொல்லப்பட்டது.

இதன் பிறகு 14 நாடுகள் இணைந்து, பல நூறு கோடி செலவில், வருட கணக்கில் தேடுதல் வேட்டையை நடத்தியும் தற்போது வரை விமானத்துக்கும் அதில் இருந்தவர்களும் என்ன ஆனது என்பது மர்மமாகவே உள்ளது.
கடைசியாக கடந்த மார்ச் மாதம் தேடல் தொடங்கி, மோசமான வானிலை காரணமாக ஏப்ரல் மாதத்தில் தேடல் திட்டம் கைவிடப்பட்டது.
மீண்டும் தேடுதல் பணி
தற்போது மீண்டும் தேடுதல் பணியை தொடங்க உள்ளதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Harapan diteruskan.
— Kementerian Pengangkutan Malaysia (@MOTMalaysia) December 3, 2025
Operasi pencarian MH370 akan dimulakan semula oleh Ocean Infinity pada 30 Disember 2025.
Kerajaan Malaysia kekal teguh dalam usaha mencari jawapan dan menzahirkan solidariti kepada semua keluarga yang terkesan.
Butiran selanjutnya: https://t.co/JQGnx4L8LS pic.twitter.com/CCbt9xg5wH
ஆய்வு நிறுவனமான ஓஷன் இன்ஃபினிட்டி(Ocean Infinity) "கண்டுபிடிக்காவிட்டால் கட்டணம் இல்லை" (no find, no fee) என்ற ஏற்பாட்டின் கீழ் இந்த தேடலை வரும் டிசம்பர் 30 ஆம் திகதி முதல் மேற்கொள்ள உள்ளது.
இந்த தேடுதல் பணியானது 55 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் 70 மில்லியன் டாலர்(இந்திய மதிப்பில் ரூ.6,403 கோடி) வழங்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக் தெரிவித்துள்ளார்.
விமானத்தைக் கண்டுபிடிப்பதற்கான அதிக நிகழ்தகவு கொண்ட இலக்கு பகுதியில் தேடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |