'பலூன்' மீனை சாப்பிட்ட பெண் மரணம்; கோமா நிலையில் கணவர்!
மலேசியாவில் பஃபர் மீனை சாப்பிட்ட பெண் உயிரிழக்க, அவரது கணவர் கோமா நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள மக்கள் மீன் சாப்பிடுகிறார்கள். ஆனால், மீன் சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து நேரிடும் என்றோ, உயிரிழப்போம் என்றோ யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். மலேசியாவில் அப்படியொரு ஆச்சரியமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பஃபர் மீன்சாப்பிட்ட பெண் மரணம்
மலேசியாவில் 84 வயதான பெண் ஒருவர் மீன் சாப்பிட்டு உயிரிழந்துள்ளார். மேலும், அந்த மீனை சாப்பிட்ட அந்தப் பெண்ணின் கணவர் கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். கடந்த வாரம், இருவரும் பஃபர் மீனை (Puffer Fish) சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சில நிமிடங்களில் பெண்ணுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் வழியிலேயே உயிரிழந்தார்.
Unsplash
இத்தம்பதியின் 51 வயது மகள் இங் ஏய் லீ (Ng Ai Lee) கூறியதன்படி, அவரது தந்தை மார்ச் 25-ம் திகதி அருகிலுள்ள கடையில் பஃபர் மீன் வாங்கி வந்துள்ளார். அதன் பிறகு கணவனும் மனைவியும் மதிய உணவாக அந்த மீனை சமைத்து சாப்பிட்டனர், சிறிது நேரத்தில் அம்மாவுக்கு நடுக்கம் ஏற்பட, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது, இருவரும் உடனடியாக நோய்வாய்ப்பட்டனர்.
தனது தந்தை தெரியாமல் மீன் வியாபாரிகளிடமிருந்து மீனை வாங்கியதாகவும், அவர்களுக்கு பஃபர் மீன் உட்கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றி முன் அறிவு இல்லை என்றும் கூறினார்.
தெரிந்தே கொடிய உணவை வாங்கியிருக்க மாட்டார்
“எனது பெற்றோர் பல வருடங்களாக அதே மீன் வியாபாரியிடம் மீன் வாங்குகிறார்கள், எனவே என் தந்தை அதைப் பற்றி இருமுறை யோசிக்கவில்லை. அவர் தெரிந்தே இவ்வளவு கொடிய உணவை வாங்கி தங்கள் உயிரை ஆபத்தில் ஆழ்த்தியிருக்க மாட்டார்,” என்று லீ கூறினார்.
தாய் நோய்வாய்ப்பட்ட சில மணிநேரங்களில், தந்தைக்கும் அதே அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்தன. அப்பெண்ணின் மரணத்திற்கான காரணம் நச்சுப்பொருள் கொண்ட உனவை உண்டது தான் என்று கூறப்பட்டது என்று ஜோகூர் சுகாதாரம் மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் லிங் தியான் சூன் கூறினார். பஃபர் மீன்களில் கொடிய நச்சு உள்ளது என்று அவர் கூறினார்.
Reuters
தந்தை இன்னும் கோமா நிலையில் இருப்பதாகவும், அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் ஏய் லீ கூறினார். என்ஜியின் தந்தை மிகவும் வயதானவர், இதனால் அவர் குணமடைந்த பிறகும் அதே நிலையில் இருக்க மாட்டார் என்று மருத்துவர் கூறுகிறார்.
திறமையான சமையல்காரர்களால் மட்டுமே சமைக்க முடியும்
டெட்ரோடோடாக்சின் மற்றும் சாக்சிடாக்சின் ஆகியவை பஃபர் மீன்களில் இருப்பதாக மருத்துவர் கூறினார். குளிரூட்டினாலும் அல்லது சூடாக்கியும் கூட அழிக்க முடியாது. இது திறமையான சமையல்காரர்களால் மட்டுமே சாப்பிடக்கூடிய உணவாக செய்யப்படுகிறது. அவர்கள் மட்டுமே திறமையாக அதன் கொடிய நச்சுத்தன்மையை அகற்றி சமைக்கின்றனர் என்று அவர் கூறினார்.
பஃபர் மீனை 'பலூன்' மீன் என்றும் கூறுவார்கள். இந்த மீன் தண்ணீருக்கு வெளியே வந்தாலோ, அல்லது தனக்கு ஆபத்து இருப்பதாக நினைத்தாலோ உடனடியாக காற்றை உள்ளிழுத்து பலூன் போல தன்னை ஊதிக்கொள்ளும். முட்கள் போல அமைந்திருக்கும் இதன் தோல் நச்சுத்தன்மை கொண்டது.