பெண் எடுத்த முடிவு... வழக்கு பதிந்த நீதிமன்றம்: நடக்கக்கூடாதது நடந்துவிட்டது என ஆர்வலர்கள்
ஐரோப்பிய நாடான மால்டாவில் கருக்கலைப்பு செய்துகொண்ட பெண் மீது நீதிமன்றம் வழக்கு பதிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவ ரீதியான கருக்கலைப்பு
குறித்த முடிவுக்கு பெண்கள் உரிமைகள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், எது நடக்கக் கூடாதோ அது நடந்துவிட்டது என குறிப்பிட்டுள்ளனர்.
பெண் ஒருவர் தமது குடியிருப்பிலேயே மருத்துவ ரீதியான கருக்கலைப்பை முன்னெடுத்துள்ளதே நீதிமன்ற வழக்கை எதிர்கொள்ள வைத்துள்ளது. இதனையடுத்து மால்டாவின் பெண்கள் உரிமைகள் அமைப்பு தங்களின் சட்டப்பிரிவு தொடர்புடைய பெண்ணிற்கு உரிய உதவிகளை முன்னெடுத்துள்ளதுடன், நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய பெண்ணை கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும், ஆனால் நடக்கவே கூடாத சம்பவம் நடந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.
இக்கட்டான சூழலில் கருக்கலைப்பு செய்து கொள்ளும் பெண் ஒருவரை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்துவது என்பது ஏற்க முடியாது எனவும், எந்த பெண்ணிற்கும் அவ்வாறான சூழல் உருவாகக் கூடாது எனவும் மருத்துவர் ஒருவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
முற்றிலும் தடை செய்துள்ள நாடு
கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையாக உள்ள மால்டா மட்டுமே ஐரோப்பிய ஒன்றியத்தில் கருக்கலைப்பை முற்றிலும் தடை செய்துள்ள நாடாக உள்ளது. இந்த நிலையில், தாயின் உயிருக்கோ அல்லது ஆரோக்கியத்திற்கோ கடுமையான சிக்கல் ஏற்படும் பட்சத்தில் கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கும் வரைவு சட்டத்தை நாடாளுமன்றத்தில் விவாதித்து வருகிறது.
Pic: Joanna Demarco
ஆனால் கத்தோலிக்க தேவாலயங்களும் முக்கிய எதிர்கட்சிகளும் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், இளையோர் உட்பட மக்கள் ஆதரவு இந்த வரைவு சட்டத்திற்கு இருப்பதாகவே கூறப்படுகிறது.