மேற்கு வங்காளத்தில் பாஜகவை பின்னுக்கு தள்ளிய மம்தா பானர்ஜி
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் கட்சி 29 இடங்களில் முன்னணி வகித்து வருகிறது.
மேற்கு வங்காளம்
மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சியை கழற்றி விட்டு தனியாக பாஜகவை எதிர்த்து நின்றது மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி.
இதனால், பல்வேறு விடயங்களை காரணம் காட்டி மம்தா பானர்ஜி கட்சியை பாஜக ஓரம் கட்ட பார்த்தது.
அதேபோல, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக 22 இடங்களை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டது. அப்போது, இந்த கருத்துக்கணிப்பு பொய்யாகும் என மம்தா கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியதும் பாஜக முன்னிலை வகித்து வந்தது. பின்னர், நேரம் போக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்க தொடங்கியது.
அதன்படி தற்போது, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 29 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 12 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.
கடந்த முறை தேர்தலில் 18 இடங்களை பிடித்த பாஜக, தற்போது 12 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |