கொரோனா பாதித்த நபரின் மிக மோசமான செயல்: பொலிசார் நடவடிக்கை
ஸ்பெயினில் கொரோனா பாதிப்புட்டன் வேண்டும் என்றே 22 பேர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
40 வயதான அவர் இருமல் மற்றும் 40C க்கும் அதிகமான காய்ச்சல் இருந்தபோதிலும் தொடர்ந்து வேலை மற்றும் ஜிம்மிற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
மட்டுமின்றி, மஜோர்காவில் உள்ள தனது பணியிடத்தில் சுற்றி நடந்து, முகமூடியை கீழே இழுத்து, இருமியதும் சக ஊழியர்களிடம் தாம் அனைவருக்கும் கொரோனாவை பரப்பப் போவதாகக் கூறியுள்ளார்.
இந்த நிலையில் அவரது சக ஊழியர்கள் ஐவர் மற்றும் உடற்பயிற்சி கூடத்தில் மூவர் என கொரோனா பாதிப்புக்கு இலக்காகியுள்ளனர்.
மட்டுமின்றி, ஒரு வயது குழந்தைகள் மூவர் உட்பட 14 பேர்களுக்கும் இவரால் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, ஸ்பெயின் பொலிசார் சனிக்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில், அந்த நபர் பல நாட்களாக கொரோனா அறிகுறிகளுடன் காணப்பட்டதாகவும்,
ஆனால் மனாக்கூர் நகரில் வேலை முடிந்து வீட்டிற்கு செல்ல மறுத்துவிட்டார் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதும், அவரது சக ஊழியர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், அந்த நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.