ஒரே நேரத்தில் இரண்டு பெண்கள் வேண்டும் என கேட்ட தொழிலதிபர்! கொலை வழக்கில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்
தொழிலதிபர் கொல்லப்பட்ட வழக்கில் ஒரே நாளில் கைது செய்யப்பட்ட நபர்
பெண்கள் வேண்டும் என தொழிலதிபர் கேட்டபோது ஏற்பட்ட தகராறில் நடந்த கொலை
சென்னையில் தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியை பொலிசார் 24 மணிநேரத்தில் கைது செய்துள்ளனர்.
சென்னை சின்மயா நகர் பகுதியில் தொழிலதிபர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் பிளாஸ்டிக் பையில் கட்டப்பட்டு சாலையோரத்தில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தொழிலதிபர் பாஸ்கரன் சடலத்தை கைப்பற்றிய பொலிசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடந்த விசாரணையில் தொழிலதிபர் பாஸ்கரன் திரைப்பட தயாரிப்பாளராகவும் பணியாற்றியதாக தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து குற்றவாளியை தேடும் பணியில் பொலிசார் ஈடுபட்ட நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பதுங்கி இருந்த கணேசன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. சென்னையில் சில ஆண்டுகளாக பெண்களை வைத்து கணேசன் பாலியல் தொழில் செய்து வந்துள்ளார். அப்போது அவருடன் அறிமுகமான பாஸ்கரன், அடிக்கடி அவரை தொடர்பு கொண்டு பெண்களுடன் தனிமையில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று குறிப்பிட்ட இரண்டு பெண்கள் வேண்டும் என பாஸ்கரன் கேட்டுள்ளார். அதற்கு கணேசன் அவர்கள் வர தாமதமாகும் என கூறியதால், ஆத்திரத்தில் பாஸ்கரன் அவரை திட்டியுள்ளார். இதில் ஏற்பட்ட கைகலப்பில் பாஸ்கரனை கீழே தள்ளியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் கணேசன் அவரை தூணில் கட்டிப்போட்டு இரும்பு கம்பியால் தலையில் தாக்கியதில் பாஸ்கரன் உயிரிழந்துள்ளார். அதன் பின்னர் அவரது கை, கால்களை கட்டி பிளாஸ்டிக் பையில் போட்டு சாலையோரத்தில் வீசியுள்ளார்.