குழந்தையுடன் வந்தவரைக் கொல்ல வந்த நபர்: மனதைக் கலங்க வைக்கும் காட்சி
குழந்தையுடன் வந்த ஒருவரைக் கொல்ல கொலையாளி ஒருவர் துப்பாக்கியுடன் வர, தன் குழந்தையை அமைதியாக ஒரு பெண்ணிடம் ஒப்படைத்துவிட்டு, சாகத் தயாராகும் ஒருவரைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகி மனதைக் கலங்க வைத்துள்ளது.
குழந்தையுடன் வந்தவரைக் கொல்ல வந்த நபர்
பிரேசில் நாட்டில், சட்டத்தரணியாக பணியாற்றிவந்த André Ribeiro (46) என்பவர், தனது மகளுடன் காரில் பயணித்துள்ளார். Permambuco என்னுமிடத்தில் அவர் காரிலிருந்து இறங்கி, காரிலிருக்கும் ஒரு பெண்ணிடமிருந்து தனது மகளை வாங்கிய நிலையில், ஒருவர் துப்பாக்கியுடன் அவரை நெருங்கியுள்ளார்.
அந்த நபர் தன்னைக் கொல்லவந்துள்ளதை உணர்ந்து கொண்ட André, பதறாமல், அமைதியாக, கடைசியாக தனது குழந்தையை ஒரு முறை பார்த்துவிட்டு, குழந்தையை அந்தப் பெண்ணிடம் கொடுத்துவிட்டு தரையில் உட்கார்ந்துகொள்வதை வெளியாகியுள்ள CCTV காட்சியில் காணமுடிகிறது.
Image: Sourced
Andréயை அந்த நபர் ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
உயிர் தப்பிய குழந்தை
தான் ஏதாவது செய்ய முயன்றால் அந்த நபர் தன் குழந்தையையும் தாக்கிவிடக்கூடும் என்று எண்ணினாரோ என்னவோ, மிகவும் அமைதியாக குழந்தையைக் கொடுத்துவிட்டு உயிரை விடத் தயாராகியுள்ளார் André.
அவர் எதிர்பார்த்ததுபோலவே அந்த நபர் அந்த பெண்ணையோ குழந்தையையோ ஒன்றும் செய்யவில்லை. அந்த நபர் கூலிக்காக கொலை செய்பவர் என்றும், அவரது குறி André மட்டுமே என்றும் கருதப்படுகிறது.
அந்தப் பெண் யார் என்று தெரியவில்லை. அதேபோல, Andréயைக் கொன்றவர் கைது செய்யப்பட்டாரா என்பது போன்ற விடயங்களும் தெரியவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |