ரூ.15 லட்சத்தில் சொந்தமாக ஒரு நாட்டையே உருவாக்கிய நபர்! ஆச்சரியம் ஆனால் உண்மை
உலகில் ஒருவர் சொந்தமாக ஒரு தனி நாட்டை உருவாக்கியுள்ளார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?
உலகில் எந்த நகரத்திலும் ரூ.15 லட்சத்தில் ஒரு வீடு கூட வாங்க முடியாது, ஆனால் அமெரிக்காவில் ஒரு மனிதர், தரிசு நிலத்தை வாங்கி, தனது சொந்த நாட்டை உருவாக்கியுள்ளார்.
slowjamastan
அந்த நாட்டின் பெயர் ஸ்லோஜமஸ்தான் குரியரசு (Republic of Slowjamastan). ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு உருவான இந்த மைக்ரோனேஷன், அதன் சொந்த பாஸ்போர்ட், கொடி மற்றும் நாணயம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதை பற்றி தெரிந்து கொள்வோம்.
slowjamastan
எந்த நாட்டிலும் மக்கள் வாழவும் குடியேறவும் வீட்டைத்தான் வாங்குகிறார்கள். ஆனால் உலகில் ஒருவர் சொந்தமாக் ஒரு நாட்டை உருவாக்கி அதில் குடியேறினார். இது ஆச்சரியமாகத் தோன்றினாலும் உண்மைதான். அமெரிக்காவில் வசிக்கும் ஒருவர் இந்த வேலையைச் செய்தார். அவர் உலகம் முழுவதும் பயணம் செய்து சலிப்படைந்து இப்போது தனது சொந்த நாட்டில் குடியேறினார்.
slowjamastan
ஸ்லோஜமஸ்தான் குடியரசு அமெரிக்காவில் உள்ள ஒரு நாடு. இது ராண்டி வில்லியம்ஸ் என்பவரால் தயாரிக்கப்பட்டது. இந்த மனிதர் தன்னை 'ஸ்லோஜாமஸ்தான் சுல்தான்' என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.
slowjamastan
ராண்டி வில்லியம்ஸ் கலிபோர்னியா பாலைவனத்தில் 11.07 ஏக்கர் காலி நிலத்தை $19,000க்கு (இந்திய பணமதிப்பில் ரூ. 15,66,920) வாங்கினார். அவர் டிசம்பர் 1, 2021 அன்று தனது நாட்டை நிறுவினார். ராண்டி தனது வானொலி நிகழ்ச்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக தனது நாட்டிற்கு பெயரிட்டார்.
slowjamastan
இந்த நாட்டின் பெயர் 'ஸ்லோஜமஸ்தான் மக்கள் குடியரசின் இறையாண்மை தேசத்தின் ஐக்கிய பிரதேசங்கள்' ஆகும். டிசம்பர் 1, 2021 அன்று, மதியம் 12:26 மணிக்கு, ஸ்லோஜாமஸ்தான் அமெரிக்காவிடமிருந்து சுதந்திரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
slowjamastan
வில்லியம்ஸ் தனது நாட்டின் தலைநகரான டப்ளினில் வாழ்ந்தார். இந்த நாட்டிற்கு அதன் சொந்த கொடி, பாஸ்போர்ட், நாணயம் மற்றும் தேசிய கீதம் உள்ளது. இந்த நாட்டின் நாணயம் டபிள் (the duble) என்று அழைக்கப்படுகிறது. ஸ்லாஜமஸ்தான் குடியரசில் 500-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட குடிமக்கள் உள்ளனர் மற்றும் 4,500-க்கும் மேற்பட்டோர் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளனர்.
slowjamastan
வில்லியம்ஸ் மற்ற நாடுகளுடன் தூதரக உறவுகளை கட்டியெழுப்ப அவர் பணியாற்றி வருவதாகவும், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வனுவாட்டு மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட சமீபத்திய பயணங்களில் 16 வெவ்வேறு நாடுகள் தனது ஸ்லோஜமஸ்தான் பாஸ்போர்ட்டில் முத்திரை பதித்துள்ளதாகவும் கூறினார். இதனைமூலம் அந்த நாடுகளால் ஸ்லாஜாமஸ்தான் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
slowjamastan
ஸ்லோஜமஸ்தான் நாடு ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்படவில்லை, ஆனால் ஸ்லோஜமஸ்தான் தொழில்நுட்ப ரீதியாக 1933 இன் மான்டிவீடியோ மாநாட்டால் வரையறுக்கப்பட்ட ஒரு இறையாண்மை அரசின் அளவுகோல்களை பூர்த்திசெய்வதாக வில்லியம்ஸ் கூறுகிறார். இந்த அளவுகோல்கள் ஒரு நாட்டின் சிறந்த வரையறை என்று கூறப்படுகிறது. முழு விவரங்களை ஸ்லோஜமஸ்தான் இணையதளத்தில் (www.slowjamastan.org) காணலாம்.
slowjamastan