சொந்த வீட்டை காலி செய்ய கட்டாயப்படுத்தியதால் பிரித்தானியர் எடுத்த பயங்கர முடிவு
தான் பல ஆண்டுகளாக வாழ்ந்துவரும் தன் சொந்த வீட்டை காலி செய்ய ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று கட்டாயப்படுத்தியதால், பயங்கர முடிவொன்றை எடுத்தார் பிரித்தானியர் ஒருவர்.
பிரித்தானியர் எடுத்த பயங்கர முடிவு
இங்கிலாந்தின் ஹாம்ப்ஷையரிலுள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றில் வீடு ஒன்றை வாங்கி எட்டு ஆண்டுகளாக அதில் வாழ்ந்துவந்துள்ளார் டேவிட் (David Phyall, 50).

ஆனால், ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று அந்த குடியிருப்பை வாங்கி இடிக்க முடிவு செய்துள்ளது.
அந்த குடியிருப்பில் வாழ்ந்துவந்த 77 குடும்பங்களும் தங்கள் வீடுகளை விற்றுவிட்டு வெளியேறிவிட, டேவிட் மட்டும் தன் வீட்டை விட்டு வெளியேற மறுத்துள்ளார்.
என்னென்னவோ ஆஃபர்கள் கொடுத்தும், அது தான் எட்டு ஆண்டுகளாக வாழ்ந்துவரும் தன்னுடைய வீடு, அதை காலி செய்யமுடியாது என்று கூறி மறுத்துள்ளார் டேவிட்.
ஒரு கட்டத்தில் ரியல் எஸ்டேட் நிறுவனம் கடும் அழுத்தம் கொடுக்கவே, கொஞ்சம் மது குடித்துவிட்டு, chainsaw ஒன்றை வாங்கி, தன் கழுத்தைத் தானே அறுத்துக்கொண்டு தன் வாழ்வை முடித்துக்கொண்டுள்ளார் டேவிட்.
வயதான அவரது பெற்றோர் தங்கள் மகனை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாததால் பொலிசாருக்கு தகவலளிக்க, பொலிசார் வந்தபோது டேவிடுடைய வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்துள்ளது.

பொலிசார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைய, வீடு முழுவதும் இரத்தம் தெறித்த நிலையில், உயிரிழந்து கிடந்துள்ளார் டேவிட்.
2008ஆம் ஆண்டு நடந்த இந்த துயரச் சம்பவம் தொடர்பில் நீதிமன்ற அதிகாரி விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில், தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை உலகுக்குத் தெரியப்படுத்துவதற்காக, கவனமாக திட்டமிட்டு, தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டுள்ளார் டேவிட் என தெரிவித்துள்ளார் அவர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |