உடற்பயிற்சி செய்ய வெளியே சென்ற நபருக்கு அடித்த அதிர்ஷ்டம்
ரொமேனியா நாட்டவர் ஒருவர் உடற்பயிற்சி செய்வதற்காக வெளியே சென்ற நிலையில், அவருக்கு புதையல் ஒன்று கிடைத்துள்ளது.
மெட்டல் டிடெக்டர் காட்டிக்கொடுத்த புதையல்
ரொமேனியாவில் வாழும் Marius Mangeac என்பவருக்கு, மெட்டல் டிடெக்டர் உதவியுடன் பொருட்களைத் தேடும் வழக்கம் உண்டு.
ஒரு நாள் காலை உடற்பயிற்சி செய்வதற்காக வெளியே சென்ற Marius, தனது வழக்கப்படியே மெட்டல் டிடெக்டர் உதவியுடன் பொருட்களைத் தேடியுள்ளார்.
அப்போது ஒரு இடத்தில் அவரது மெட்டல் டிடெக்டர் ஒலி எழுப்ப, அந்த இடத்தில் Marius தோண்ட, அங்கு 1,469 வெள்ளிக் காசுகள் இருந்துள்ளன.
ஒவ்வொன்றும் 5,276 ரூபாய் முதல் 14,068 ரூபாய் வரை மதிப்பு கொண்ட அந்த நாணயங்களின் மொத்த மதிப்பு 17,58,519 ரூபாய் ஆகும்.
அந்த நாணயங்கள் சுமார் 2,000 வருடங்களுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த நாணயங்கள் ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |