உலகின் ஆபத்தான பணிகளில் ஒன்று - பல்பு மாற்ற இத்தனை லட்சம் சம்பளமா?
அமெரிக்காவில், பல்பு மாற்றும் பணியை செய்பவருக்கு 20,000 டொலர் சம்பளம் வழங்குவதாக கூறப்படுகிறது.
பல்பு மாற்ற 20,000 டொலர் சம்பளம்
அமெரிக்காவின் தெற்கு டகோட்டா மாகாணத்தில் உள்ள ரேபிட் சிட்டி பகுதியில், 457 மீட்டர் உயர கோபுரம் ஒன்று உள்ளது.
இது தொலைத்தொடர்பு கோபுரம் என கூறப்படுகிறது. இதன் உச்சியில், விமானங்களை எச்சரிக்கை செய்யும் சிவப்பு நேர ஒளிரும் விளக்கை பொருத்தும் பணியை கெவின் ஷேமிட்த்(Kevin Schmidt) என்பவர் செய்து வருகிறார்.
இந்த விளக்கை 6 மாதங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டி இருக்கும் என கூறப்படுகிறது.
Kevin Schmidt became known for climbing a 1,500-foot (457-meter) television broadcast tower in South Dakota to change a single light bulb on the top, a job he performed about twice a year & it paid $20,000 per climb.
— 𝐓𝐨𝐦𝐦𝐲 𝐁𝐥𝐚𝐳𝐞 (𝐍𝐄𝐖) (@ThxxasBlxze_) September 3, 2025
Could you do this job? 👀 pic.twitter.com/YprYEgG85m
இதற்காக ஒருமுறை அந்த கோபுரத்தில் ஏறி, விளக்கை மாற்ற அவர் 20,000 டொலர்(இந்திய மதிப்பில் ரூ.17.62 லட்சம்) சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.
கெவின் ஷேமிட்த் கோபுரத்தில் ஏறி விளக்கை மாற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த கோபுரத்தின் மேலே செல்ல செல்ல, மணிக்கு 60கிமீ வேகத்தில் காற்று வீசுமாம். கடுமையான பயிற்சி இருந்தால் மட்டுமே இந்த வேலையை செய்ய முடியும்.
இது உலகின் ஆபத்தான வேலைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |