லட்சக்கணக்கில் வாடகை கொடுத்து ரோபோவுடன் வாழ்ந்து வரும் இளைஞர்.., என்ன காரணம்?
சயின்ஸ் பிக்ஷன் கதைகளை கொண்ட படத்தின் மீதுள்ள ஆர்வத்தால் இளைஞர் ஒருவர் ரோபோவுடன் வாழ்ந்து வருகிறார்.
யார் அவர்?
பொதுவாகவே சில திரைப்படங்கள் நமக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். அந்தவகையில் சீனாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சினிமா தாக்கத்தால் தனது வாழ்க்கையில் பெரிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
சீனாவைச் சேர்ந்த இளைஞர் ஜாங் (25). இவருக்கு சயின்ஸ் பிக்ஷன் கதைகளை கொண்ட திரைப்படங்கள் மீது அதீத விருப்பம். இதனால் தனது நிஜ வாழ்க்கையிலும் ரோபோவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று நினைத்துள்ளார்.
இவர், நியூ யார்க் பல்கலைகழகத்தில் பொருளாதார பட்டப்படிப்பை படித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றின் மூலம் பிரபாலாகி தற்போது இன்ப்ளூயன்சராக மாறியுள்ளார். இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் 1.4 மில்லியன் பின் தொடர்பாளர்களை கொண்டுள்ளார்.
இந்நிலையில், ரோபோவுடன் சேர்ந்து வாழ முடிவு செய்த ஜாங் ஒரு நாளைக்கு 1,20,000 ரூபாயை வாடகையாக கொடுத்து வருகிறார்.
இந்த ரோபோவின் உயரம் 127 செ.மீ மற்றும் 35 கிலோ எடை கொண்டது. இது, ஜாங்குடன் சேர்ந்து சமையல் செய்வது, வீட்டு வேலைகள் செய்வது போன்ற செயல்களை செய்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல், தேநீர் கடைக்கு செல்வது மற்றும் ஷாப்பிங் செய்வது போன்ற விடயங்களை செய்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |