ChatGPTயால் 11 கிலோ உடல் எடை குறைத்த நபர்! பகிர்ந்த ஆச்சரிய விடயம்
ChatGPT பரிந்துரைகளை வைத்து நபர் ஒருவர் 11 கிலோ வரை உடல் எடையை குறைத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
AI தொழில்நுட்பம்
AI எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஒரு பகுதியான ChatGPT தற்போது பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ChatGPT வழங்கிய உடல் எடையை குறைக்கும் ஆலோசனைகளைப் பயன்படுத்தி நபர் ஒருவர் 11 கிலோ எடையை குறைத்திருக்கிறார்.
உடல் எடையை குறைக்க ChatGPT உதவி
கிரெக் முஷென் என்பவர் ஓட்டம் மூலம் உடல் எடையை குறைக்க விரும்பாததால் ChatGPTயின் உதவியை நாடியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அதன் உதவியுடன் ஆரோக்கியமான உடற்பயிற்சி திட்டத்தை அவர் உருவாக்கியுள்ளார். இந்த திட்டத்திற்கு அவரது பயிற்சியாளர் McConkey ஒப்புதல் அளித்துள்ளார்.
பின்னர் ChatGPT பரிந்துரைத்த உடற்பயிற்சிகளை ஆர்வத்துடன் கிரெக் செய்து வந்துள்ளார். தனது வீட்டின் கதவுக்கு அருகில் அவர் ஓடுவதற்கு பயன்படுத்தும் காலணிகளை வைக்க ChatGPT மூலம் கிரெக் அறிவுறுத்தப்பட்டார்.
மூன்றாவது நாளில் கிரெக் சில நிமிடங்கள் மட்டுமே ஓடினார். தனது ஓட்டத்தைத் தொடர்ந்த அவர் அசௌகரியம் குறித்து ChatGPTயிடம் ஆலோசனை கேட்டார்.
மூன்று மாதங்களுக்கு பிறகு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறாக கிரெக் 11 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார்.
பயிற்சியாளரின் கூற்று
இதுகுறித்து கிரெக்கின் பயிற்சியாளர் McConkey கூறும்போது, சிறிய பழக்கவழக்கங்கள் கூட உடற்பயிற்சியை தொடங்கும் சவால்களை சமாளிக்க உதவும் என்றார்.
அத்துடன் முன் திட்டமிடல், காட்சிப்படுத்தல் மற்றும் தொடர்புடைய பழக்கவழக்கங்கள் மக்களை வீட்டை விட்டு வெளியேறவும், அவர்களின் உடற்பயிற்சிகளில் உறுதியாக இருக்கவும் ஊக்குவிக்கும் எனவும் குறிப்பிட்டார்.
கிரெக் ஓடுவதற்கு முன்னும், பின்னும் தசை இறுக்கம் மற்றும் வலியை மதிப்பிடுவதற்கு Foam Rolling பயன்படுத்துவதை McConkey பரிந்துரைத்துள்ளார்.
அதேபோல் ஓடிய பிறகு உங்கள் தசைகளில் விறைப்பு அல்லது அதிக வலி ஏற்பட்டால், நீங்கள் அதை மிகைப்படுத்திவிட்டீர்கள் என்று அர்த்தம்.
அதனை சரிசெய்ய தசைகள் இயல்பு நிலைக்கு திரும்பும்வரை தொடர்ந்து Foam Rolling செய்யவும் பரிந்துரைத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |