சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்?
52 வயதான நபர், சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடையை குறைத்துள்ளார்.
சாட்ஜிபிடியால் எடைக்குறைப்பு
AI சாட்பாட்டான Chatgpt, மனிதர்களின் அன்றாட வாழ்வில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது.
சமீபத்தில் பெண் ஒருவர், சாட்ஜிபிடி வழங்கிய ஆலோசனையின் மூலம், 1 மாதத்தில் ரூ.10 லட்ச கடனை அடைத்தார்.
அதேபோல், தற்போது 52 வயதான நபர் ஒருவர், சாட்ஜிபிடி வழங்கிய ஆலோசனையின் மூலம், 46 நாட்களில் 11 கிலோ எடையை குறைத்துள்ளார்.
அமெரிக்காவின் பசிபிக் நார்த்வெஸ்ட் பகுதியில் வசித்து வரும் 56 வயதான யூடியூபர் கோடி குரோனுக்கு, திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது.
கடந்த காலத்தில் தடகள வீரராக இருந்த கோடி குரோன், தனது உடல் எடை அதிகரிப்பால் கவலையடைந்த அவர், தனது உடல் எடையை குறைக்க சாட்ஜிபிடியிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.
அவரது உடலுக்கு ஏற்ற உணவு பட்டியல், உடற்பயிற்சி, தூக்க நேரம் ஆகியவற்றை சாட்ஜிபிடி பரிந்துரை செய்துள்ளது.
உணவுகள்
சாட்ஜிபிடியிடம் ஆலோசனைப்படி, உணவு முறை, உடற்பயிற்சி, தூக்க நேரம் ஆகியவற்றை மாற்றிக்கொண்ட அவர், 46 நாட்களில் 95 கிலோவாக இருந்த தனது உடல் எடையை 83 கிலோவிற்கு குறைத்துள்ளார்.
ஒரு நாளைக்கு 2 வேலை மட்டும் சத்துகள் நிறைந்த உணவை எடுத்துக்கொண்டுள்ளார்.
காலை உணவாக 4 முட்டைகள், 1/4 கிலோ மாட்டிறைச்சி, 1/3 கப் சர்க்கரை சேர்க்கப்படாத ஓட்ஸ், இரவு உணவாக 1/3 கப் மல்லிகை அரிசி, 8 அவுன்ஸ் மெலிந்த மாட்டிறைச்சி (ஸ்டீக் போன்றவை), மற்றும் ஆலிவ் எண்ணெய் அல்லது 1/2 வெண்ணெய் பழம் எடுத்துக்கொண்டுள்ளார்.
சர்க்கரை, பால் பொருட்கள், விதை எண்ணெய்கள் மற்றும் அனைத்து பதப்படுத்தப்பட்ட பொருட்களையும் உண்பதை குறைத்துள்ளார்.
வாழ்க்கை முறை
தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னர், மொபைல் போன் மற்றும் கணினி பயன்பாட்டை தவிர்த்துள்ளார்.
ஒரு நாளுக்கு 7-8 மணி நேரம் இரவு உறங்கியுள்ளார். சீரான உறக்கத்திற்கு, உறங்கும் முன் தேன் அருந்தியுள்ளார். தினமும் சுமார் 4 லிட்டர் தண்ணீர் குடித்துள்ளார்.
தினமும் அதிகாலை 4:30 மணிக்கு எழுவதை பழக்கமாக்கிக்கொண்ட அவர், வாரத்திற்கு 6 நாட்கள் காலை 6 மணிக்கு 60 முதல் 90 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்துள்ளார்.
மேலும், தினமும் காலையில் 20 நிமிடங்கள் சூரிய ஒளியை பெறுவதை உறுதி செய்துள்ளார்.
எடைக்குறைப்பிற்காக எந்த ஒரு ஊசியையும், மருந்துகளையும் பயன்படுத்தவில்லை என வலியுறுத்தினார்.
சுத்தமான உணவு, சீரான பயிற்சி, சிறந்த தூக்கத்தால் இது சாத்தியமானது என தெரிவித்துள்ளார்.
மேலும், இதன் மூலம் உடல்எடையைக் குறைத்தது மட்டுமல்லாமல், மூட்டு வலியைக் குறைத்தது, ஆற்றலை அதிகரித்ததோடு, மன தெளிவையும், நம்பிக்கையையும் அளித்ததாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |