16 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழும் நபர்: எத்தனை குழந்தைகள் தெரியுமா?
தான்சானியாவை சேர்ந்த நபர் ஒருவர் 20 திருமணம் செய்து 16 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
20 திருமணம்
தற்போதைய சூழலில் ஆண் ஒருவர் ஒரு திருமணம் செய்துகொண்டு குழந்தைகளுடன் வாழ்வதே கடினமாக உள்ளது.
ஆனால் தான்சானியாவை சேர்ந்த நபர் ஒருவர் 20 திருமணம் செய்ததுடன் 16 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறாராம்.
அவரது பெயர் Mzee Ernesto Muinuchi Kapinga.
கடந்த 1961ம் ஆண்டு முதல் திருமணம் செய்த நிலையில், தற்போது வரை 20 திருமணம் செய்து கொண்டுள்ளார், இதில் ஏழு பேர் அக்கா- தங்கைகள் ஆவர்.
104 வாரிசுகள்
அவர்களது பழங்குடி சமூகத்தில் கூடுதல் திருமணங்கள் செய்ய தடை இல்லாததால், Kapinga தனது தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்க பல திருமணங்கள் செய்து கொண்டுள்ளார்.
5 திருமணம் வரை அவரின் தந்தை குடும்பத்தை கவனித்து வந்த நிலையில், அதன் பிறகு கபிங்காவே தனது குடும்ப தலைவராக பொறுப்பேற்று கொண்டார்.
தற்போது வரை அவர் 20 திருமணம் செய்துள்ளார். இதில் 4 மனைவிகள் இறந்து விட்ட நிலையில், 16 மனைவிகளுடன் வாழ்ந்து வருகிறார். இவரது குடும்பத்தில் ஆண்களும், பெண்களுமாக 104 வாரிசுகளும், 144 பேரன் பேத்திகளும் உள்ளனர்.
இதுகுறித்து Kapinga கூறுகையில், 1962ம் ஆண்டு முதல் குழந்தை பிறந்தது, அப்போது என் தந்தை ஒரு திருமணம் மட்டும் போதாது, பல திருமணம் செய்து கொள் என்று என்னிடம் கூறினார்.
முதல் 5 திருமணத்திற்கு எனது தந்தை வரதட்சணை கொடுத்தார், அடுத்தடுத்து நானே பொறுப்பேற்றுக் கொண்டேன்.
பலரும் நான் குடும்பத்தை கட்டுப்படுத்தி வைத்திருப்பதாக நினைக்கின்றனர், அது உண்மை இல்லை. எனது மனைவிகளின் ஒற்றுமையே காரணம், நான் அவர்களை வழிநடத்த மட்டுமே செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் சில நேரங்களில் தன் பிள்ளைகளின் பெயர்கள் கூட மறந்துவிடும் என்றும், முகத்தை மட்டும் வைத்து அடையாளம் காண்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.
விவசாயம் மட்டுமே Kapingaவின் குடும்ப தொழிலாக இருக்கிறது, தங்களது வயல்களில் வேலை செய்து அனைவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனராம்.