டெல்லி முதல்வரின் கன்னத்தில் அறைந்த நபர் - குறைதீர்ப்பு முகாமில் அதிர்ச்சி சம்பவம்
டெல்லி முதல்வர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி முதல்வர் மீது தாக்குதல்
2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், பாஜகவை சேர்ந்த ரேகா குப்தா டெல்லி முதல்வராகபொறுப்பேற்றார்.
வழக்கமாக ஒவ்வொரு வாரமும் டெல்லியில் உள்ள அவரது சிவில் லைன்ஸ் இல்லத்தில், Jan Sunvai என்னும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறும்.
அதன்படி, இன்று காலையில் நடந்த Jan Sunvai நிகழ்வின் போது, 35 வயது மதிக்கத்தக்க நபர் முதல்வரிடம் சில ஆவணங்களை வழங்கி விட்டு, பேசிக்கொண்டிருந்த போதே திடீரென முதல்வரின் தலைமுடியை பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த முதல்வர், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
யார் அவர்?
தாக்குதல் நடத்திய நபரை கைது செய்துள்ள காவல்துறையினர், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தாக்குதல் நடத்திய நபரை குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்த ராஜேஷ் சகாரியா என அடையாளம் காணப்பட்டுள்ளது.
என்ன நோக்கத்திற்காக தாக்கினார் என்பது காவல்துறையினரின் விசாரணைக்கு பின்னர் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வரின் மீதான தாக்குதலுக்கு, டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் அதிஷி, காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |