விமானத்தின் கழிவறையில் ஆபத்தை விளைவிக்கும் செயலை செய்த பயணி கைது!
விமானத்தின் கழிவறையில் புகைப்பிடித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துபாயில் இருந்து இந்தியாவில் உள்ள அகமதாபாத் நகருக்கு விமானம் ஒன்று நேற்று வந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தின் கழிவறையில் ஆண் பயணி ஒருவர் புகைப்பிடித்தபடி இருந்தார்.
இதை கண்டுபிடித்த ஊழியர்கள் அவரை கையும் களவுமாக பிடித்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர். விமானம் அகமதாபாத் விமான நிலையம் வந்த பின்னர் பொலிசில் அவர் ஒப்படைக்கப்பட்டார்.
newswaali
பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக அவர் கைது செய்யப்பட்டார். விமானங்களில் புகைப்பிடிப்பது என்பது தடை செய்யப்பட்டுள்ள விடயமாகவே உள்ள நிலையில் பிரச்சனை ஏதும் ஏற்படும் முன்னர் அவர் சிக்கியிருக்கிறார்.
அதே போல மது போதையில் தலையில் ஒருவரை தாக்கியதாக இன்னொரு பயணியும் கைது செய்யப்பட்டுள்ளார்.