வத்திக்கான் தேவாலயத்தில் ஆடைகளின்றி போராட்டம் நடத்திய நபர்: ரஷ்யாவிற்கு எதிர்ப்பு
உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக வத்திக்கான் தேவாலயத்தில் ஒருவர் நிர்வாணமாக போராட்டம் நடத்தினார்.
நிர்வாணமாக தேவாலய பலிபீடத்தின் மீது ஏறிய நபர்
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிப்பதற்க்காக விதமாக, ஒரு நபர் முற்றிலும் நிர்வாணமாகி, ரோமன் கத்தோலிக்க தேவாலயமான செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவின் பலிபீடத்தின் மீது ஏறினார்.
இதுவரை அடையாளம் காணப்படாத அந்த நபர், உக்ரைன் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்று அவரது முதுகில் எழுதிவைத்திருந்ததாக கூறப்படுகிறது.
உடலில் காயங்கள்
மேலும், அந்த நபரின் உடலில் சுயமாக விரல் நகங்களால் கிழிக்கப்பட்ட காயங்கள் இருந்ததாகவும், உள்ளூர் ஊடகங்கள் அவரை மனச்சோர்வடைந்தவர் என்றும் வர்ணித்தன.
இச்சம்பவம் வியாழன் அன்று பசிலிக்கா மூடும் முன் நடந்துள்ளது. வாடிகன் காவலர்கள் அந்த நபரை இத்தாலிய பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பல இத்தாலிய ஊடக வலைத்தளங்கள் சுற்றுலாப் பயணிகள் எடுத்த சம்பவத்தின் புகைப்படங்களை வெளியிட்டன.
CNN