மனைவியால் கணவனுக்கு அடித்த பேரதிஷ்டம்: லொட்டரியில் கிடைத்த பிரம்மாண்ட பரிசு தொகை
சீனாவில் மனைவியின் பிறந்த திகதியில் லொட்டரி சீட்டு வாங்கிய நபருக்கு கிட்டத்தட்ட 90 கோடி ரூபாய் பரிசு தொகை கிடைத்துள்ளது.
மனைவியால் அடித்த அதிர்ஷ்டம்
கிழக்கு சீனாவின் ஜீஜியாங் மாகாணத்தில் உள்ள ஹாங்சூவில் பகுதியை சேர்ந்த வூ என்ற அதிர்ஷ்டசாலி நபருக்கு லொட்டரியில் 90 கோடி ரூபாய் பரிசு தொகை கிடைத்துள்ளது.
வூ தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளின் பிறந்த திகதியை கொண்டு இந்த மாத தொடக்கத்தில் 340 ரூபாய்க்கு லொட்டரியை வாங்கியுள்ளார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு லொட்டரி குலுக்கலுக்கான வெற்றியாளர் அறிவிக்கப்பட்ட நிலையில், வூ வாங்கிய ஒவ்வொரு லொட்டரி சீட்டுக்கும் 5 கோடி ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது. அத்துடன் ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் சுமார் 90 கோடி ரூபாய் பரிசுத் தொகை வூ-க்கு கிடைத்துள்ளது.
SCMP
இவ்வளவு பெரிய பரிசு தொகையை தான் வென்றதற்கு தன்னுடைய மனைவியும் குழந்தையும் தான் காரணம் என மகிழ்ச்சியுடன் வூ கூறியுள்ள நிலையில், ஜீஜியாங் மாகாணத்தில் இவ்வளவு பெரிய பரிசு தொகையை யாரும் வென்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மனைவி மற்றும் குழந்தைகளை பெயர்களில் லொட்டரி சீட்டுகளை வூ வாங்குவது இது முதல் முறை அல்ல, பல முறை இவ்வாறு வூ லொட்டரி சீட்டுகளை வாங்கியுள்ளார்.
இது தொடர்பாக வூ தெரிவித்த விளக்கத்தில், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே என்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளின் பிறந்த திகதியில் உள்ள எண்களில் லொட்டரியை வாங்கி வந்தேன், இந்த எண்களில் எனக்கு நிறைய பரிசுகள் கிடைத்துள்ளது.
SCMP
எனவே நான் எப்போது என்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளின் பிறந்த திகதியை தான் பயன்படுத்துவேன் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
குடும்பத்துடன் மீண்டும் இணையும் வூ
30 வயதுடைய வூ, ஹாங்சூவில் தங்கி வேலை பார்த்து வந்தார், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் சீனாவின் மற்றொரு நகரில் வசித்து வந்துள்ளனர்.
2009 முதல் லொட்டரி வாங்குகிறேன், நான் அதற்கு அடிமையாகி விடமாட்டேன் என்பது அவர்களுக்கு தெரியும் என்பதால் என்னை எதுவும் அவர்கள் சொல்ல மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது மிகப்பெரிய தொகையை வூ வென்றதை தொடர்ந்து, அவருடைய மனைவி மற்றும் குழந்தையுடன் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |