20 ஆண்டுகளாக பொலிசாரால் தேடப்பட்ட நபர்: அவர் எங்கிருந்தார் என தெரியவந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சி
தலைமறைவு குற்றவாளி ஒருவரை 20 ஆண்டுகளாக பொலிசார் தேடிவந்தார்கள்.
சமீபத்தில் அவர் பொலிசாரிடம் சிக்கிய நிலையில், அவர் எங்கிருந்தார், என்ன செய்துகொண்டிருந்தார் என தெரியவந்தபோது, அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள்.
20 ஆண்டுகளாக பொலிசாரால் தேடப்பட்ட நபர்
அண்டோனியோ (Antonio ‘El Diablo’ Riano) என்னும் நபர், 2004ஆம் ஆண்டு, அமெரிக்காவிலுள்ள ஒஹையோவிலுள்ள மதுபான விடுதி ஒன்றின் வெளியே துப்பாக்கிச்சூடு நடத்தியதைத் தொடர்ந்து தலைமறைவானார்.
அவர் துப்பாக்கியால் சுட்டதில், Benjamin Becarra (25) என்பவர் கொல்லப்பட, தலைமறைவான அண்டோனியோவை பொலிசார் 20 ஆண்டுகளாக தேடிவந்தார்கள்.
கடந்த வியாழக்கிழமை, 72 வயதாகும் அவர், தனது சொந்த ஊரான மெக்சிகோவிலுள்ள Zapotitlan Palmas என்னும் ஊரில் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
இவ்வளவு காலம் என்ன செய்துகொண்டிருந்தார் தெரியுமா?
அண்டோனியா இவ்வளவு காலமும் மெக்சிகோவில் உள்ளூர் பொலிஸ் அதிகாரியாக பணியாற்றிவந்துள்ளார்!
ஏன் பொலிஸ் வேலையைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்று கேட்டதற்கு, நான் மெக்சிகோ மக்களுக்கு உதவுவதற்காக பொலிஸ் வேலையைத் தேர்ந்தெடுத்தேன் என்று கூறியுள்ளார் அண்டோனியோ.
அவர் மீதான வழக்கு விசாரணை விரைவில் துவங்க இருக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |