48 வயதில் முதன்முறையாக வாக்களித்த நபர்! ரஜினிக்காக காத்திருந்தாராம்
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்திற்காக காத்திருந்த அவரது ரசிகர் ஒருவர் முதன்முறையாக வாக்களித்துள்ளார்.
புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் மகேந்திரன்(வயது 48), பள்ளிப்படிக்கும் போதிருந்தே ரஜினிகாந்தின் தீவிர ரசிகராவார்.
ரஜினி அரசியலுக்கு வந்தால்தான் தனது முதல் வாக்கை செலுத்துவது என பிடிவாதமாக இருந்துள்ளார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என அறிவித்ததும் மகேந்திரன் ஏமாற்றமடைந்துள்ளார்.
இதற்கிடையே தற்போதைய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தான் எதிர்பார்த்த ஆட்சியை அளிப்பதாக கூறி தன்னை திமுகவில் மகேந்திரன் இணைத்துக்கொண்டார்.
30 ஆண்டுகளாக வாக்கு செலுத்தாமல் இருந்த மகேந்திரன் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 22வது வார்டு ராஜகோபாலபுரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வரிசையில் நின்று தனது முதல் வாக்கை பதிவு செய்தார்.