இன்ஸ்டா ரீல்ஸால் கொட்டும் அருவியில் வலுக்கிய இளைஞர்! பதைபதைக்கும் காட்சிகள்
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகத்தில் ஆர்ப்பரிக்கும் அருவியின் ஓரத்தில் நின்ற இளைஞர் பாறையில் இருந்து கீழே விழும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டா ரீல்ஸ் மோகம்
இந்திய மாநிலம் கர்நாடகாவின் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியைச் சேர்ந்தவர் சரத்குமார். இவருக்கு வயது 23. இவர், தனது நண்பர்களுடன் கொல்லூர் கிராமத்தில் இருந்து 6 கிமீ தொலைவில் அமைந்துள்ள அரசினகுண்டி அருவிக்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து, ஆர்ப்பரிக்கும் அருவியில் பாறையின் அருகே நின்று சரத்குமாரும், அவரது நண்பர்களும் அருவியை ரசித்துள்ளனர். அப்போது, அருவியின் அருகே நின்று வீடியோ எடுத்து அதனை இன்ஸ்ட்டாவில் பதிவிட வேண்டும் என்று சரத்குமார் நினைத்துள்ளார்.
பின்னர், அருவியின் அருகே நான் நிற்கிறேன். என்னை வீடியோ எடுங்கள் என தனது நண்பர்களிடம் சரத்குமார் கூறியுள்ளார்.
அருவியின் அருகே சென்ற அவர், அங்குள்ள பாறை மீது ஏறி வீடியோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். இதனை, அவரது நண்பர்கள் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்.
அருவியில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்
வீடியோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்த சரத்குமார் பாறையில் இருந்து நிலை தடுமாறினார். பின்பு, ஒரு நொடியில் பாறையில் இருந்து வழுக்கி ஆர்ப்பரிக்கும் அலைகளோடு அடித்துச் செல்லப்பட்டார். அப்போது, அவரது நண்பர்கள் என்ன செய்வதன்று தெரியாமல் கூச்சலிட்டனர்.
ಧಾರಾಕಾರ ಮಳೆಯ ಹಿನ್ನಲೆ ಜಲಪಾತ ವೀಕ್ಷಣೆಗೆಂದು ತೆರಳಿದ್ದ ಯುವಕ ಕಾಲು ಜಾರಿ ನೀರು ಪಾಲಾದ ಘಟನೆ #Udupi ಜಿಲ್ಲೆಯ ಅರಶಿನಗುಂಡಿ ಜಲಪಾತದ ಬಳಿ ನಡೆದಿದೆ.#WesternGhats #Karnatakarains #Monsoon2023 pic.twitter.com/N7fsEWqgG9
— Karnataka Rains⛈️ (@Karnatakarains) July 24, 2023
பின்னர், தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அருவில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரை தேடும் பணியில் பொலிசார் மற்றும் மீட்பு படையினர் ஈடுபட்டனர். ஆனால், அவரை மீட்க முடியவில்லை. தற்போது மீட்பு பணி தொடரும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இளைஞர் அருவியில் அடித்துச் செல்லும் வீடியோ சமுக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |