மணிப்பூர் பெண்ணின் கணவர் ராணுவ வீரர்! கண்ணீருடன் சொன்ன வார்த்தைகள்
மணிப்பூரில் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்து செல்லப்பட்ட பெண்களில் ஒருவரின் கணவர் ராணுவ வீரர் என்பது தெரியவந்துள்ளது.
மணிப்பூரில் இரு இன குழுக்களுக்கு இடையே வெடித்த மோதல் பல உயிர்களை காவு வாங்கி விட்டது, இதில் கொடூரத்தின் உச்சம் இரு பெண்களை ஆடைகள் இல்லாமல் தெருவில் இழுத்து சென்று வன்கொடுமைக்கு ஆளாக்கியது தான்.
கடந்த மே மாதம் நடந்த இச்சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.
குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரது கணவர் ராணுவ வீரர் என்பது தெரியவந்துள்ளது.
அவர் கூறுகையில், திடீரென வந்த வன்முறை கும்பலொன்று 2 அல்லது 3 பெண்களை தனியாக அழைத்து சென்று ஆடைகளை கழற்ற சொன்னது.
அதில் ஒருவர் என்னுடைய மனைவி, ஊர்மக்கள் எதிர்த்த போதும் வெறியாட்ட கும்பல் அடங்கவில்லை.
என்னுடைய தந்தையை சுட்டுக் கொன்றனர், நான் நாட்டிற்காக பணியாற்றி வருகிறேன், கார்கில், இலங்கை என தாய்நாட்டு மக்களுக்காக பாடுபடுகிறேன்.
ஆனால் என்னால் என் மனைவி, தந்தையை காப்பாற்ற முடியவில்லையே, அந்த கும்பலுடன் பொலிசார் இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இத்துடன் இது முடிவடையுமா? எதிர்காலத்திலும் தொடரும் என்ற அச்சம் என்னுள் உள்ளது, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வேண்டும் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |