மார்ச் 1 முதல் LPG சிலிண்டர், Fastag தொடர்பில் முக்கிய மாற்றங்கள்
மார்ச் மாதம் தொடக்கத்தில் LPG சிலிண்டர் முதல் சமூக வலைத்தளங்கள் வரை சில விதிகள் அமுலுக்கு வருகின்றன.
ஒவ்வொரு மாத துவக்கத்திலும் அரசாங்கத்தின் சில விதிகள் மாறுவதுடன், சில புதிய விதிகள் அமுலுக்கு வரும்.
அந்த வகையில் Fast Tag, LPG Gas சிலிண்டர் உள்ளிட்டவற்றில் வரும் மார்ச் 1 முதல் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன.
LPG Gas சிலிண்டர்
சிலிண்டர் தொடர்பில் ஒவ்வொரு மாத துவக்கத்திலும் அரசாங்கத்தினால் மதிப்பாய்வு செய்யப்படும். அந்த வகையில் மார்ச் மாத தொடக்கத்திலும் LPG விலைகள் குறித்து அரசாங்கம் வெளியிடும்.
முன்னதாக பிப்ரவரி மாத தொடக்கத்தில் LPG சிலிண்டர் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் அப்படியே தொடரப்பட்டது.
சென்னையில் வீட்டு உபயோக LPG சிலிண்டர் விலை ரூ.1068.50 ஆகும். டெல்லியில் ரூ.1053 ஆகவும், மும்பையில் ரூ.1052.50 ஆகவும், பெங்களூருவில் ரூ.1055.50 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.1,105 ஆகவும் உள்ளன.
FASTag
பிப்ரவரி 29க்கு முன்பாக FASTag தொடர்பில் KYC செய்வது மிக அவசியம் ஆகும். ஏனெனில், இந்த திகதி தான் கடைசி என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதற்குள் KYC-ஐ முடிக்கவில்லை எனில் FASTag செயலிழக்கப்படலாம் (Deactivate) என்று கூறப்பட்டுள்ளது.
வங்கி விடுமுறைகள்
மார்ச் மாதத்தில் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும். இதில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகள் அடங்கும். ரிசர்வ் வங்கி வெளியிட்ட நாட்காட்டியின் அடிப்படையில் மார்ச் 11 மற்றும் 25ஆம் திகதிகளில் வங்கிகள் இயங்காது.
மேலும் மார்ச் 5, 12, 19 மற்றும் 26ஆம் திகதிகள் ஞாயிற்றுக்கிழமைகளாக இருப்பதால், அந்த நாட்களிலும் வங்கிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்கள்
IT விதிகளை அரசாங்கம் சமீபத்தில் மாற்றியுள்ளது. சமூக வலைத்தளங்கள் இந்த புதிய விதிகளை பின்பற்ற வேண்டும். இதில் எக்ஸ், பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் அடங்கும்.
இந்த தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, உண்மைக்கு புறம்பான, தவறான தகவல்களுடன் சமூக ஊடகங்களில் செய்திகள் பரப்பப்பட்டால் அதற்கு அபராதம் விதிக்கப்படும். மார்ச் மாதம் முதல் இந்த விதிகள் அமுலுக்கு வரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |