உலகில் அதிக விவாகரத்து நடைபெறும் நாடு: முதலிடத்தில் எந்த நாடு?
உலகிலேயே மிக குறைந்த விவாகரத்து நடைபெறும் நாடாக இந்தியா உள்ளது என்ற புள்ளி விவரம் தெரியவந்துள்ளது.
மிக குறைந்த விவாகரத்து நடைபெறும் நாடு
உலகிலேயே அதிக விவாகரத்து நடைபெறும் நாடுகளின் பட்டியல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதில் இந்தியா மிகவும் குறைந்த அளவு அதாவது வெறும் 1 சதவீத விவாகரத்துடன் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
விவாகரத்தில் குறைந்த சதவீதத்துடன் கடைசி இடத்தை பிடித்து இந்திய குடும்பங்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்திய கலாச்சாரமும், சட்ட அமைப்புகளும் முக்கிய காரணம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியாவுக்கு அடுத்தபடியாக வியட்நாம் நாட்டில் மிக குறைந்த அளவு விவாகரத்து நடைபெற்று வருவதாக தெரியவந்துள்ளது.
வியட்நாமில் நடைபெறும் 100 திருமணங்களில் 7 திருமணங்கள் விவாகரத்தில் முடிவதாக தகவல் தெரிவிக்கின்றன.
அதிக விவாகரத்து நடைபெறும் நாடுகள்
விவாகரத்து நாடுகளின் பட்டியல் படி, ஐரோப்பிய நாடான போர்ச்சுக்கலில் சுமார் 94 சதவீத திருமணங்கள் விவாகரத்தில் முடிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை தொடர்ந்து ஸ்பெயினில் 85 சதவீத திருமணங்கள் விவாகரத்தில் முடிகிறது என தெரியவந்துள்ளது.
இதைப்போல பிரான்ஸ், ஸ்வீடன், பின்லாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான திருமணங்கள் விவாகரத்தில் முடிவதாகவும், அமெரிக்கா கனடா ஆகிய நாடுகளில் 50 சதவீத திருமணங்கள் விவாகரத்தில் முடிவதாக தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |