கமேனியின் இறுதிச்சடங்கில் முகக்கவசம் அணிந்த மர்ம நபர் யார்? புதிருக்கு தீர்வு
ஈரான் உச்சத் தலைவர் அலி கமேனியின் இறுதிச்சடங்கில், முகக்கவசம் அணிந்த மர்ம நபர் ஒருவர் முன்னிலையில் தோன்றினார்.
சமூக ஊடகங்களில் அவர் அலி கமேனியின் மகனும், புதிய உச்சத் தலைவருமான மொஜ்தபா கமேனி என பரவலாக ஊகிக்கப்பட்டது.
ஆனால், அதிகாரப்பூர்வ தகவலின்படி அந்த நபர் அலி கமேனியின் மூத்த பேரன் மொஹம்மது ஜாவத் கமேனி (Javad Khamenei) ஆவார். அவர் மோஸ்தபா கமேனியின் (Mostafa Khamenei) மகன்.

ஜாவத், பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலில் கடுமையாக காயமடைந்து முகத்தில் தீவிர எரிப்புகள் ஏற்பட்டதால், முகக்கவசம் அணிந்திருந்தார்.
அந்த தாக்குதலில் அலி கமேனி உயிரிழந்தார். அதே தாக்குதலில் அவரது மகன் மொஜ்தபா கமேனியும் கடுமையாக காயமடைந்ததாக அமெரிக்க உளவுத்துறை தகவல்கள் கூறுகின்றன.
புதிய உச்சத் தலைவர் மொஜ்தபா, மார்ச் மாதம் பதவியேற்ற பிறகு பொதுமக்கள் முன்னிலையில் தோன்றவில்லை. எந்த குரல் அல்லது வீடியோ செய்தியும் வெளியிடவில்லை. இதனால் அவரது உடல்நிலை மற்றும் இருப்பிடம் குறித்து தொடர்ந்து சந்தேகங்கள் எழுகின்றன.
இறுதிச்சடங்கில், முகக்கவசம் அணிந்த ஜாவத் கமேனி முன்னிலையில் பிரார்த்தனைகளை வழிநடத்தியது, சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
அலி கமேனியின் இறுதிச்சடங்கு ஆறு நாட்கள் நீடித்து, ஈரான் மற்றும் ஈராக் முழுவதும் 43 மில்லியன் மக்கள் பங்கேற்றதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்தன.
மொஜ்தபா கமேனி, தனது தந்தையின் மரணத்திற்கு பழிவாங்குவோம் என டெலிகிராம் வழியாக எழுத்து மூலம் செய்தி வெளியிட்டுள்ளார். இது அவர் வெளியிட்ட முதல் பொது அறிக்கை இதுவாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |