111 ஆண்டுகளில் பதிவான அதிக வெப்பம்…சிலி நாட்டில் பயங்கர காட்டுத்தீ: 11 பேர் பலி
சிலி நாட்டில் பற்றிய காட்டு தீயில் சுமார் 7 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் எரிந்து சேதமடைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
சிலியில் காட்டு தீ
தென் அமெரிக்க நாடான சிலியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டு 10 லட்சம் ஏக்கர் காடுகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
சிலி நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயில் 7 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் எரிந்து சேதமடைந்து இருக்கும் நிலையில், அதனை கட்டுப்படுத்த அந்த நாட்டு அரசாங்கம் பல நாட்களாக போராடி வருகிறது.
Monster forest fire breaks out in Chile's Melipilla #Wildfire #Chile #Melipilla #SanPedro #IncendioForestal #ForestFire #Fires #Viral #Weather #Climate #SantaOlga #Papalillo pic.twitter.com/vp3sJyuDpl
— Earth42morrow (@Earth42morrow) December 12, 2022
காட்டுத்தீ காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மற்றும் சாண்டியாகோ நகரிலும் அதன் அருகில் உள்ள குராகாவியிலும் புகை சூழ்ந்துள்ளதால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த காட்டுத்தீயில் 11 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அதிகமான வெப்பம்
A wildfire near Santiago, #Chile produced a pulse of pyrocumulus that ejected smoke to high enough altitudes to be transported quickly northeastward -- as seen in @NOAASatellites #GOES16/#GOESEast True Color RGB images: https://t.co/foUZZCoZ0h; pic.twitter.com/854QIi2IBd
— UW-Madison CIMSS (@UWCIMSS) December 15, 2022
கடந்த வியாழக்கிழமை மட்டும் சாண்டியாகோவில் 36.7 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகியுள்ளது.
இவை கடந்த 111 ஆண்டுகளில் சாண்டியாகோ நகரம் கண்ட மூன்றாவது மிக அதிகமான வெப்பநிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.