தொழில் பாதிப்பு... பாலஸ்தீன ஆதரவு அமைப்புக்கு எதிராக வழக்கு தொடர்ந்த McDonald's உணவகம்
மலேசியாவில் இஸ்ரேல் ஆதரவு நிறுவனங்களை புறக்கணிக்க வலியுறுத்தும் அமைப்புக்கு எதிராக இழப்பீடு கேட்டு McDonald's உணவகம் வழக்கு தொடர்ந்துள்ளது.
6 மில்லியன் ringgit
மலேசியாவில் தங்கள் தொழில் பாதிப்பதாக கூறி, உள்ளூர் பணமதிப்பில் 6 மில்லியன் ringgit இழப்பீடாக வழங்க வலியுறுத்தியுள்ளது. இந்திய பண மதிப்பில் சுமார் ரூ 8.32 கோடி இழப்பீடு கோரியுள்ளது.
இஸ்லாமியர்கள் பெரும்பான்மை கொண்ட மலேசியா எப்போதுமே பாலஸ்தீன ஆதரவு கொள்கையை முன்னெடுத்து வந்துள்ளது. ஆனால் குறிப்பிட்ட சில இஸ்லாமிய நாடுகளில் இஸ்ரேல் ஆதரவு நிறுவனங்களை புறக்கணிக்கும் கோரிக்கை வலுத்ததுடன், பொதுமக்கள் அதை செயல்படுத்தவும் செய்தனர்.
நீதிமன்றத்தில் சந்திப்பதாக சவால்
இதனால் மேற்கத்திய நாடுகளின் நிறுவனங்கள் சில பெரும் இழப்பையும் சந்தித்துள்ளது. மலேசியாவில் McDonald's உணவக உரிமம் பெற்றுள்ள GAR என்ற நிறுவனம் தற்போது இந்த விவகாரத்தில் பாலஸ்தீன ஆதரவு அமைப்பான BDS மீது வழக்கு தொடர்ந்துள்ளது.
@epa
McDonald's உணவகத்தை புறக்கணிக்க வேண்டும் என்று மலேசிய மக்களை BDS அமைப்பு தூண்டி வருவதாகவும் இதனால் தொழில் பாதிப்பதுடன், வருவாய் இழப்பும் வேலை வாய்ப்பு குறைப்பும் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. ஆனால் BDS அமைப்பானது இந்த விவகாரத்தை நீதிமன்றத்தில் சந்திப்பதாக சவால் விடுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |