கலவர பூமியான ஹரியானா! 2500 பேரை காப்பாற்றிய சிங்கப்பெண்- யார் இந்த மம்தா சிங்?
மணிப்பூரில் இரண்டு மாதங்களுக்கு மேலாக மோதல்கள் நீடித்து வரும் சூழலில், ஹரியானாவிலும் போராட்டம் வெடித்துள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இருதரப்பினருக்கு இடையேயான மோதல் தீ வைப்பு, கடைகளை அடித்து நொறுக்குதல் என இதுவரையிலும் 6 பேரின் உயிரை எடுத்துள்ளது.
இதுதொடர்பில் கவலையளிக்கும் செய்திகள் வெளியாகி வருகின்றன, இதன்போது 2500 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளார் மம்தா சிங்.
என்ன நடந்தது?
ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் இரு தரப்பினர் இடையே நடந்த மோதல் மற்றும் கலவரத்தின்போது 2500 பேர் நல்ஹர் மஹாதேவ் கோவிலில் அகப்பட்டுக்கொண்டனர்.
இந்த தகவலை அறிந்த உள்துறை அமைச்சர் அணில் விஜி உடனே அந்த இடத்தின் கூகிள் லொகேஷனை மம்தா சிங்கிற்கு அனுப்ப, அவர் காவல் படையினரோடு அந்த இடத்திற்கு விரைந்து அவர்களை மீட்டார்.
பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மருத்துவப் படிப்பு படித்து வந்த மம்தாவுக்கு அதில் ஏனோ பெரிய ஈடுபாடில்லை. அதனால் மருத்துவ படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டு தேர்வெழுதி 1996ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியானார்.
காவல்துறைக்கு இவரது தொடர்ச்சியான பங்களிப்பு இவருக்கு நன்மதிப்பையும் மரியாதையையும் பெற்று தந்தது.
மனித உரிமை ஆணையத்திற்கான விசாரணை, மேற்கு வங்காளம் மற்றும் சட்டிஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற அப்ரேஷன்களின் போது மனிதஉரிமை மீறல்களை கையாண்டது என பல நடவடிக்கைகள் குறித்து உச்சநீதிமன்றம் இவரை பாராட்டியுள்ளது.
அதோடு அவரின் காவல்த்துறை சேவையை பாராட்டும் விதமாக 2022 குடியரசு தினத்தின் போது ஜனாதிபதியால் விருது வழங்கப்பட்டது.
ரகசிய வலைப்பின்னல்கள் மூலம் குற்றத்தை களைவது மற்றும் மாபியா குழுக்களை ஒழிப்பதில் இவர் பங்கு முக்கியமானதாகும்.