கேட் மிடில்டனை முந்தி காட்டுகிறேன்! மேகன் மெர்க்கல் வகுத்துள்ள பலே திட்டம்
மேகன் மெர்க்கல், அமெரிக்கர்களின் மனதை வெல்வதற்கும் கேட் மிடில்டனை விட அந்நாட்டு மக்களிடையே பிரபலமாக மாறுவதற்கும் பெரிய திட்டத்தை வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவிலும் நேசிக்கப்படும் கேட் மிடில்டன்
பிரித்தானியாவில் அதிகம் நேசிக்கப்படும் கேட் மிடில்டன், அமெரிக்காவிலும் மேகன் மெர்க்கலை விட இரண்டு மடங்கு பிரபலமாக உள்ளார் என Express UK தெரிவித்திருக்கிறது.
சமீபத்திய ஆய்வில், மேகன் மெர்க்கலை விட கேட் மிடில்டன் மிகவும் பிரபலமானவர் என்றும் தெரியவந்துள்ளது. இதையடுத்து மேகன் மெர்க்கல் அமெரிக்கர்களை கவர்ந்து அவர்களின் மனதை வெல்ல திட்டங்களைத் தயாரிக்க தொடங்கியிருக்கிறாராம்.

GETTY IMAGES
மேகனின் திட்டம்
அமெரிக்காவின் பாஸ்டனுக்கு கேட் மிடில்டன் அடுத்த மாதம் வரவுள்ள நிலையில் அவரின் வருகையை நினைத்து மேகன் பயப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து மேகன், கேட் மிடில்டனை முந்தவும் அவரை விட அமெரிக்கர்கள் மத்தியில் தான் மிகவும் பிரபலமானவர் எனவும் நிரூபிக்கவும் திட்டத்தை வகுத்துள்ளார் என கூறப்படுகிறது.
சில அரச நிபுணர்களின் கூற்றுப்படி கேட் மிடில்டன் அமெரிக்கர்களுடன் தொடர்பு கொள்ளும் உண்மையான திறனைக் கொண்டிருப்பதாக நம்புகிறார்கள், ஏனெனில் அவர் அமெரிக்காவில் தனது காலடி தடத்தை பதிக்காமலேயே மேகனை விட பிரபலமாக இருப்பதாக கூறுகின்றனர்.

hindustantimes
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        