கால்பந்தாட்ட ஜாம்பவான் மெஸ்ஸி உயிருக்கு அச்சுறுத்தல்., மர்ம நபர்கள் துப்பாக்கிசூடு
அர்ஜென்டினாவில் மெஸ்ஸியின் குடும்பத்திற்கு சொந்தமான பல்பொருள் அங்காடியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து கால்பந்தாட்ட ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸிக்கு (Lionel Messi) பயங்கர அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச் சூடு
அர்ஜென்டினாவின் ரொசாரியோவில் உள்ள லியோனல் மெஸ்ஸியின் மனைவியின் குடும்பத்துக்குச் சொந்தமான பல்பொருள் அங்காடியில் வியாழக்கிழமை அதிகாலை இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
தாக்குதல் நடத்தியவர்கள் மெஸ்ஸிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் ஒரு செய்தியை விட்டுச் சென்றுள்ளனர். அதில், “மெஸ்ஸி, உனக்காகக் தான் காத்திருக்கிறோம். ஜாவ்கின் ஒரு நார்கோ, அவர் உன்னை பாதுகாக்க மாட்டார்” என்று எழுதப்பட்டிருந்தது.
Getty images
அந்தச் செய்தியில் ஜாவ்கின் என்பது மெஸ்ஸியின் சொந்த ஊரான ரொசாரியோ நகரின் மேயர் பாப்லோ ஜாவ்கின் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம்
மெஸ்ஸியின் மனைவி அன்டோனெலா ரோகுஸ்ஸோவின் (Antonela Roccuzzo) குடும்பத்திற்கு சொந்தமான அந்த சூப்பர் மார்க்கெட் ரொசாரியோ நகரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் மொத்தம் குண்டுகள் சுடப்பட்டன. ஆனால் அனைத்தும் உலோகத் திரைகளைத் தாக்கியதாள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தாக்குதல் நடத்தியவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
Getty Images
அச்சுறுத்தல் இல்லை - மேயர் ஜாவ்கின்
சம்பவ இடத்துக்கு வெளியே ஊடகங்களுடன் பேசிய மேயர் ஜாவ்கின், குற்றவாளிகள் நகரத்தில் உள்ள கிரிமினல் கும்பல்கள் என்று கூறினார். மேலும், உலகின் மிகவும் பிரபலமான நபரைப் பற்றி பேசுவது, மிரட்டல் விடுப்பது என்பது சாதாரணமானது என்று அவர் கூறினார்.
மேலும், எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை என்று கூறிய மேயர், ரோக்குசோ குடும்பத்தை வளாகத்தைத் திறந்து சாதாரணமாக வேலை செய்ய அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டார். என்ன நடந்தது என்பது தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
©GrosbyGroup
பிப்ரவரி 27 அன்று பாரிஸில் வழங்கப்பட்ட சிறந்த விருதுகளில் உலகின் சிறந்த வீரராக மெஸ்ஸி தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு ரோகுஸோவின் குடும்பத்தின் வணிக வளாகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதுவரை, மெஸ்ஸியோ அல்லது அவரது மனைவியோ ரொசாரியோவில் என்ன நடந்தது என்பது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. மெஸ்ஸி தற்போது அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் பிரான்சில் வசிக்கின்றனர்.
©GrosbyGroup
கத்தார் 2022 உலகக் கோப்பையில் அர்ஜென்டினா வெற்றி பெற்ற பிறகு, லியோனல் கடைசியாக ரொசாரியோவில் கடந்த டிசம்பர் மாதம் தனது குடும்பத்தினருடன் விடுமுறையைக் கொண்டாடினார்.