உலகிலேயே 12வது பணக்காரரானார் மார்க் ஜுக்கர்பெர்க்!
உலகிலேயே 12வது பணக்காரர் என்ற பெருமையை மார்க் ஜுக்கர்பெர்க் பெற்றார்.
பணக்காரரானார் மார்க் ஜுக்கர்பெர்க்
சமீபத்தில் மெட்டா 20,000த்துக்கும் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இதனால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் நிறுவனத்தின் வருவாய் பாதிக்கப்படும் என்று பலர் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், வோல் ஸ்ட்ரீட் எதிர்பார்ப்புகளை முறியடித்து 2023ம் ஆண்டு முதல் காலாண்டில் 28.6 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டி அசத்தியுள்ளது.
கடந்த வியாழனன்று நிறுவனத்தின் பங்கு 14% உயர்ந்தது. இதனால், மார்க் ஜுக்கர் பெர்க்கின் சொத்து மதிப்பு $10 பில்லியன் அதிகரித்து 87 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
அதாவது, மெட்டா நிறுவனம் 20,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த பிறகு அந்நிறுவனத்தின் சி.இ.ஒ. மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு சுமார் ரூ.80,000 கோடி வரை (14%) அதிகரித்துள்ளது. இவரின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் ரூ.7 லட்சம் கோடியாக உள்ளது. இதனால், உலகிலேயே 12வது பணக்காரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
Mark Zuckerberg Gets $10 Billion Richer After Meta’s Home Run Earnings Report https://t.co/CbFnE3YZj7 pic.twitter.com/etJjSNbjHv
— Forbes (@Forbes) April 27, 2023
Mark Zuckerberg’s wealth grows $10 billion after Meta’s shares catapult 14% on strong earnings and a ‘year of efficiency’
— Nihal Shaikh (@nihalshaikh9881) April 29, 2023
Meta is recovering ❤️? pic.twitter.com/jcJozCA4eV
Mark Zuckerberg's net worth increased by $10.2 Billion today $META pic.twitter.com/SSpgyMNC2g
— StockMKTNewz - Evan (@StockMKTNewz) April 28, 2023