ரஷ்யாவின் தேடப்படும் பட்டியலில் Meta செய்தித் தொடர்பாளர்; குற்றவியல் விசாரணை தொடக்கம்
மெட்டா செய்தித் தொடர்பாளர் ஆண்டி ஸ்டோன் ரஷ்யாவின் தேடப்படும் பட்டியலில் உள்ளார்.
மெட்டா தளத்தின் செய்தித் தொடர்பாளர் ஆண்டி ஸ்டோன் (Andy Stone), ரஷ்யாவின் தேடப்படும் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் என்று ரஷ்ய அரச ஊடகத்தை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய உள்துறை அமைச்சகமும் ஸ்டோன் மீது குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளது, ஆனால் விசாரணையின் விவரங்களையோ அல்லது அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளையோ வெளியிடவில்லை.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் மாஸ்கோ உக்ரைன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து, மெட்டாவின் முக்கிய சமூக தளங்களான Facebook மற்றும் Instagram ஆகியவை ரஷ்யாவில் தடை செய்யப்பட்டன.
ஆண்டி ஸ்டோனுக்கு எதிரான நடவடிக்கை மூன்று நாட்களுக்குப் பிறகு, ரஷ்ய நீதிமன்றம் வியாழனன்று ஆல்பாபெட்டின் கூகுளுக்கு உக்ரைனில் நாட்டின் சிறப்பு இராணுவ நடவடிக்கை பற்றிய தவறான தகவலை அகற்றத் தவறியதற்காக 4 மில்லியன் ரூபிள் (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ. 1.47 கோடி) அபராதம் விதித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Meta spokesperson Andy Stone on Russia wanted list, Facebook Instagram Banned in Russia, Russia Ukraine war