பூமியை விட பல மில்லியன் ஆண்டுகள் பழமையான விண்கல் - அமெரிக்காவில் ஆய்வு
பூமியை விட மில்லியன் ஆண்டுகள் பழமையான விண்கலலொன்று அமெரிக்காவில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள ஹென்றி கவுண்டியில் கடந்த ஜூன் 26-ஆம் திகதி பட்டப்பகலில் தீப்பிழம்பாக வீடொன்றில் வந்து விழுந்தது.
இந்த விண்கல் 4.56 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது, பூமியின் வயதான 4.54 பில்லியன் ஆண்டுகளை விட 20 மில்லியன் ஆண்டுகள் பழமையானது.
இந்த 23 கிராம் விண்கல் துண்டுகளை ஜார்ஜியா பல்கலைக்கழகத்தின் Planetory Geologist ஸ்கொட் ஹாரிஸ் (Scott Harris) ஆய்வு செய்துள்ளார். மைக்ரோஸ்கோப்பில் பரிசோதனை செய்து ஓத்து எந்த வகை விண்கற்களுடன் ஒத்துப்போகிறது என்பதை ஆய்வு செய்தார்.
ஜார்ஜியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த 27-வது விண்கல் McDonough mereorite என பெயரிடப்பட்டுள்ளது.
NASA இந்த விண்கல் Bootids meteor shower-ன் போது பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்ததாக உறுதிப்படுத்தியுள்ளது.
வீட்டிற்குள் விழுந்த இந்த விண்கல் தரையில் சிறிய பலத்தை ஏற்படுத்தியது. விழுந்த இடத்தில் இன்னும் கூட விண்கல் துகள்கள் காணப்படுவதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Meteorite crash in US, Meteorite crash Georgia, McDonough mereorite, space rock, mereorite older than earth, 4.56 billion year old mereorite