ஓடும் பேருந்தில் சாரதிக்கு பலமுறை கத்திக்குத்து:தப்பிச் சென்ற இளைஞருக்கு பொலிஸார் வலைவீச்சு
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மெட்ரோ பேருந்து ஓட்டுநர் ஒருவரை மர்ம நபர் பல முறை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்து ஓட்டுநருக்கு கத்திக்குத்து
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் உட்லேண்ட் ஹில்ஸ் பகுதிக்கு அருகே புதன்கிழமை மாலை மெட்ரோ பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்த போது அதன் ஓட்டுநரை மர்ம நபர் ஒருவர் பல முறை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகர பொலிஸாரின் தகவலின் படி, இந்த கத்திக்குத்து சம்பவம் எர்வின் சாலை மற்றும் டோபங்கா கனியன் பவுல்வர்டு பகுதிக்கு அருகே மாலை 5.15 மணியளவில் அரங்கேறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
KTLA-TV Channel 5
இதற்கிடையில் மெட்ரோ நிறுவனம் வழங்கிய உள்ள தகவலில், சந்தேக நபர் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதற்கு முன்னதாக பேருந்தில் பயணம் செய்ததாகவும், பின் மெட்ரோ ஓட்டுநரை பலமுறை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் இந்த வன்முறை சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியும் சோகமும் அடைந்து இருப்பதுடன், இதில் பாதிக்கப்பட்ட ஓட்டுநர் மற்றும் அவரது அன்புக்குரியவர்களுக்கு தகுந்த ஆறுதல் வழங்கி வருவதாகவும் மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் குற்றவாளியை கண்டறிய லாஸ் ஏஞ்சல்ஸ் நகர பொலிஸாருடன் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் சந்தேக நபர் மீது வழக்கு தொடரப்படும் என்றும் மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
Tonight, a Metro Bus operator was assaulted after a male suspect boarded the bus and began arguing with him. The suspect stabbed the operator multiple times before fleeing on foot. The operator was transported to the hospital in critical condition.
— Metro Los Angeles (@metrolosangeles) May 25, 2023
தேடுதல் வேட்டை
இந்நிலையில் குற்றவாளி இருக்கும் இடம் தெரியாத நிலையில் அவரை தேடும் பணியில் பொலிஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
அவர் குறித்து வெளியான அடையாளங்களில் சந்தேக நபர் இறுதியாக சிவப்பு சட்டை மற்றும் கருப்பு பேண்ட் அணிந்த 21 வயதுடைய நபராக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
LAPD
அத்துடன் அவர் ஓவன்ஸ்மவுத் அவென்யூவில் கிழக்கு பகுதி நோக்கி தப்பி ஓடியதாக நம்பப்படுகிறது.
இதற்கிடையில் கத்தியால் குத்தப்பட்ட ஓட்டுநர் கவலைக்கிடமான நிலையில் நிலையில் உயிருக்கு போராடி வருவதாக மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.