13 கோடி மதிப்பிலான மதுபானங்கள்…ரகசிய அறையில் இருந்து திருடிய மெக்சிகோ அழகி!
ஸ்பெயினின் நட்சத்திர விடுதியில் இருந்து 13 கோடி ரூபாய் மதுபாட்டில்களை திருடிய மெக்சிகோ நாட்டு அழகிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருட்டில் ஈடுபட்ட அழகி
ஸ்பெயினில் தென்மேற்கு பகுதியின் கேசர்ஸ் நகரில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில், 19ம் நூற்றாண்டை சேர்ந்த 3 கோடி மதிப்பிலான பழமையான மதுபான பாட்டில் மற்றும் பல்வேறு ஒயின் வகைகள் ரகசிய அறையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இதனை திருட திட்டமிட்ட மெக்சிகோ நாட்டை சேர்ந்த முன்னாள் அழகி பிரிசிலா லாரா குவேரா என்பவர் தனது காதலர் கான்ஸ்டன்டின் கேப்ரியல் உடன் இணைந்து 3 முறை அந்த ஹோட்டலுக்கு சென்று திருட்டு ஒத்திகை பார்த்துள்ளார்.
Miss Earth Mexico
இறுதியாக 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் மீண்டும் அந்த ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கி, விலையுயர்ந்த மதுபான பாட்டில்களை திருட முடிவு செய்துள்ளார்.
பின்பு, நள்ளிரவு வரவேற்பரைக்கு வந்த பிரிசிலா, உணவு தயாரித்து தரும்படி ஊழியரை வற்புறுத்தியுள்ளார், ஊழியரும் வேறு வழியில்லாமல் உணவு தயார் செய்வதற்காக சமயலறைக்குள் சென்றுள்ளார்.
அந்த சிறிய இடைவெளியில் பிரிசிலா மற்றும் அவரது காதலன் இருவரும் இணைந்து மொத்தம் 13 கோடி மதிப்புடைய 45 மதுபாட்டில்களை திருடி விட்டு, மறுநாள் காலையில் சாதாரணமாக அறையையும் காலி செய்துவிட்டு சென்றுள்ளனர்.
Getty
பின் ரகசிய ஆய்வு அறையை பார்வையிட்ட போது, மது பாட்டில் காணாமல் போகி இருப்பதையும், அதை பிரிசிலா அவரது காதலனுடன் இணைந்து திருடி இருப்பதை சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டுபிடித்தனர்.
4 ஆண்டுகள் சிறை பொலிஸார்
அவர்களை கைது செய்வதற்குள் பிரிசிலா அவரது காதலன் கேப்ரியல் இருவரும் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
பின் சர்வதேச உதவிகளுடன் அவர்களை ஸ்பெயின் நாடு தேடிவந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் குரேஷியாவில் இருவரையும் கைது செய்தனர்.
பின் இந்த வழக்கிற்கான நீதிமன்ற விசாரணையில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர், விசாரணையின் முடிவில் மெக்சிகோ அழகிக்கு 4 ஆண்டுகளும், காதலன் கேப்ரியலுக்கு 41/2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
மேலும் பாதிக்கப்பட்ட ஹோட்டலுக்கு 61/2 கோடி இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.