பதவியேற்ற ஒரு வாரத்தில் மேயர் தலைதுண்டித்து படுகொலை!
மெக்சிகோவில் குரேரோ மேயர் பதவியேற்ற ஒரே வாரத்தில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Alejandro Arcos
தென்மேற்கு மெக்சிகோவின் குரேரோ மாகாணத்தில் அமைந்துள்ள நகரம் Chilpancingo. சுமார் 2,80,000 மக்கள் வசிக்கும் இந்நகரின் மேயராக Alejandro Arcos தெரிவானார்.
அதனைத் தொடர்ந்து Arcos பதவியேற்ற நிலையில் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குரேரோ ஆளுநர் Evelyn Salgado இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "Arcosயின் இழப்பு ஒட்டுமொத்த குரேரோ சமுதாயத்தினரையும் துக்கப்படுத்துகிறது மற்றும் எங்களை கோபத்தில் நிரப்பியுள்ளது" என தெரிவித்துள்ளார்.
புகைப்படங்கள்
மேலும், குரேராவின் மாநில அட்டர்னி ஜெனரல் அலுவலகமும் அவரது கொலையை விசாரித்து வருவதாகக் கூறியது. வாட்ஸ்அப் செயலியில் Pick-up truckயின் மேல் துண்டிக்கப்பட்ட தலையை சித்தரிக்கும் புகைப்படங்கள் பரவியதையடுத்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வந்தது.
புதிய நகர அரசாங்கத்தின் செயலாளர் பிரான்சிஸ்கோ டாபியா சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு Arcos கொல்லப்பட்டுள்ளார்.
அத்துடன் பதவியேற்ற ஒரு வாரத்தில் நகர மேயர் படுகொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் கடந்த சூன் மாதம் நடந்த பொதுத்தேர்தலின்போது 6 வேட்பாளர்கள் படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |