வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்! இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து ஒபாமாவின் ட்வீட்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா இஸ்ரேல்-ஹமாஸ் போர் விரைவில் முடிவுக்கு வரும் என தெரிவித்துள்ளார்.
ஓர் ஆண்டு நிறைவு
கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி தொடங்கிய ஹமாஸ் - இஸ்ரேல் போர் ஓர் ஆண்டை நிறைவு செய்துள்ளது.
இந்த போரில் உயிரிழந்தவர்களுக்கு இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்வில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும், இஸ்ரேல் ராணுவம் தெற்கு லெபனானில் உள்ள இரு கட்டிடங்களை குறிவைத்துள்ளதால், கடற்கரையை விட்டு பொதுமக்கள் விலகி இருக்குமாறும், தெற்கு பெய்ரூட்டில் உள்ள பொதுமக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு உடனடியாக வெளியேறுமாறும் எச்சரித்துள்ளது.
ஒபாமா ட்வீட்
இதற்கிடையில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா (Barack Obama) இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "ஒரு வருடத்திற்கு முன்பு ஹமாஸ் இஸ்ரேலுக்கு எதிராக ஒரு பயங்கரமான தாக்குதலை நடத்தியது. பாதுகாப்பற்ற பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உட்பட 1,400 இஸ்ரேலிய குடிமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் கடத்தப்பட்டனர்.
இன்று, அமைதிக்கான வாய்ப்புகள் முன்னெப்போதும் இருப்பதை விட வெகு தொலைவில் இருப்பதாக தெரிகிறது. ஆனால் பணயக்கைதிகள் அனைவரும் திரும்புவார்கள், வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்போம், வெறுப்பை நிராகரிப்போம்.
எதிர்காலத்தில் இஸ்ரேலியர்களும், பாலஸ்தீனியர்களும் ஏங்கும் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை அனுபவிப்பார்கள் என்று நாங்கள் தொடர்ந்து நம்புகிறோம்" என தெரிவித்துள்ளார்.
One year ago, Hamas launched a horrific attack against Israel, killing over 1,400 Israeli citizens – including defenseless women, children, and the elderly – and kidnapping hundreds more. Today, the prospects of peace seem more distant than ever. But we continue to hope for a…
— Barack Obama (@BarackObama) October 7, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |