கடத்தப்பட்ட 50 புலம்பெயர்ந்தோர்: பெரும்பாலானோரை மீட்ட மெக்சிகோ பொலிஸ்
மெக்சிகோவில் பேருந்தில் இருந்து கடத்தப்பட்ட 50 புலம்பெயர்ந்தோரில் பெரும்பாலானவர்களை காவல்துறை மீட்டது.
கடத்தப்பட்ட 50 பேர்
அமெரிக்க எல்லையில் மெக்சிகோவின் வடகிழக்கு மாநிலமான நியூவோ லியோனில் பேருந்தில் இருந்து கடத்தப்பட்ட சுமார் 50 பேர் கொண்ட குழுவில் இருந்த 34 புலம்பெயர்ந்தோரை ஒரு பண்ணையிலிருந்து மீட்டுள்ளதாக மெக்சிகோ பொலிஸார் தெரிவித்தனர்.
டாக்டர் அரோயோ நகருக்கு அருகிலுள்ள லாஸ் மதீனா என்ற கிராமத்தில் புலம்பெயர்ந்தோர்கள் கடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
rivaltimes
சிக்கிய பேருந்து-34 பேர் மீட்பு
புலம்பெயர்ந்தோர் பயணித்த பேருந்து, புதன்கிழமையன்று நியூவோ லியோனில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும். அதிலிருந்த இரண்டு சாரதிகளையும் காணவில்லை என மத்திய சான் லூயிஸ் பொடோசி மாநில அட்டர்னி ஜெனரல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த மீட்பு நடவடிக்கையில் 10 ஆண்கள், 14 பெண்கள் மற்றும் 10 குழந்தைகள் மீட்கப்பட்டனர். மேலும், மற்றவர்களை மீட்கும் பனி தீவிரமாக நடந்துவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Representative image / AFP
மெக்ஸிகோ அமெரிக்காவிற்கு செல்லும் வழியில் புலம்பெயர்ந்தோர்களைக் கடத்தும் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. அமெரிக்க அதிகாரிகள் பல குடியேறியவர்களை விரைவாக வெளியேற்ற அனுமதித்த கோவிட் காலகட்ட எல்லைக் கொள்கையான Title-42 சமீபத்தில் திரும்பப் பெறப்பட்டதன் மூலம் இந்த குற்றங்கள் அதிகரித்துள்ளன.