மெக்சிகோவில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து: 6 இந்தியர்கள் பயணித்த பேருந்தில் 17 பேர் உயிரிழப்பு
மெக்சிகோவில் 6 இந்தியர்களுடன் சென்ற பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து
மேற்கு மெக்சிகோவில் 40 பயணிகளுடன் டிஜுவானா நோக்கி சென்று கொண்டு இருந்த பயணிகள் பேருந்து ஒன்று வியாழக்கிழமை அதிகாலை நெடுஞ்சாலைக்கு பக்கவாட்டில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியுள்ளது.
இதில் 14 பெரியவர்கள் மற்றும் 3 சிறுவர்கள் என 17 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 22 பேர் காயமடைந்துள்ளனர்.
Reuters
பேருந்து கவிழ்ந்து உள்ள பள்ளத்தாக்கு 50 மீட்டர் ஆழம் கொண்டு இருப்பதால் மீட்பு பணிகளில் சிரமம் இருப்பதாக நயாரிட் பாதுகாப்பு மற்றும் சிவில் பாதுகாப்பு செயலாளர் ஜார்ஜ் பெனிட்டோ ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் 40 பயணிகளுடன் சென்ற பேருந்து சாலையை விட்டு எதற்காக விலக வேண்டும் என்ற காரணம் தெளிவாக இன்னும் தெரியவரவில்லை.
பேருந்தில் இருந்த 6 இந்திய பயணிகள்
இந்நிலையில் நயாரிட் மாநில தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்த தகவலில், விபத்தில் சிக்கிய பேருந்தில் 6 இந்திய பயணிகள் பயணம் செய்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
Reuters
இது குறித்த விவரங்களை சேகரிக்க தொடர்பு கொண்ட போது பேருந்து நிறுவனமோ அல்லது மெக்சிகோ இடம்பெயர்வு நிறுவனமோ உடனடியாக பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |