சமூக ஊடகத்தில் புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்த பிரபல பாடகரின் வளர்ப்பு மகள்: சிறிது நேரத்தில்...
மெக்சிகோ நாட்டவரான பிரபல பாடகர் ஒருவரின் வளர்ப்பு மகளான சமூக ஊடகப் பிரபலம் ஒருவர், அழகிய புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்த சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார்.
அழகிய இளம்பெண்
மரியா (María Fernanda Robles, 21) மெக்சிகோவைச் சேர்ந்த பிரபல பாடகரான Luis Ángel 'El Flacoவின் வளர்ப்பு மகள். அவர் ஒரு சமூக ஊடகப் பிரபலமும் கூட.
மரியாவை இன்ஸ்டாகிராமில் 25,000 பேர் பின் தொடர்கிறார்கள். தனது பயணங்களின்போது எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்வார் மரியா.
Image: Jam Press
கடைசி செல்பி
செவ்வாய்க்கிழமையன்று Mazatlán என்னுமிடத்திலுள்ள கடலில் பயணித்துக்கொண்டிருந்த மரியா, அதிகாலையில் எடுக்கப்பட்ட சில அழகிய புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளார்.
பிறகு சில நண்பர்களுடன் கடலில் நீந்தச் சென்றுள்ளார் மரியா. அதிகாலை 4.40 மணியளவில், மரியாவும் அவரது தோழி ஒருவரும் தண்ணீரில் மூழ்கியிருக்கிறார்கள். அந்த தோழி மீட்கப்பட்டுவிட்ட நிலையில், மரியா காணாமல் போயுள்ளார்.
Image: Jam Press
பின்னர் மரியாவின் உயிரற்ற உடல்தான் கரை ஒதுங்கியுள்ளது. அவசர உதவிக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்த நிலையில், கடலில் குதித்த மரியா, மது போதையிலிருந்தது தெரியவந்துள்ளது.
Image: Jam Press
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |