"நாங்கள் கதறினோம், ஆனால் யாரும் உதவவில்லை” சோகத்தை விவரிக்கும் மெக்சிகோ தீ விபத்தில் தப்பிய அகதிகள்!
மெக்சிகோவில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் பிழைத்த அகதிகள் தீ விபத்தின் போது நடந்த சம்பவத்தை விவரிக்கிறார்கள்.
மெக்சிகோ தீ விபத்து
கடந்த திங்களன்று அமெரிக்கா-மெக்சிகோ எல்லையான சியுடாட் ஜூவாரெஜ் நகரில் உள்ள அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பற்றிய தீ, அகதிகள் முகாம் முழுவதும் பரவியது.
தென் அமெரிக்கா நாடுகளை சேர்ந்தவர்கள் மெக்சிகோ வழியாக சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சிக்கும் போது அவர்களை மெக்சிகோ பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்து தடுப்பு காவல் முகாம்களில் அடைத்து வைக்கின்றனர்.
@afp
இந்த நிலையில் அகதிகள் தங்கவைக்கப்பட்டிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 பேர் உடல் கருதி உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் வெனிசுலா நாட்டை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.
தீ விபத்தை விவரிக்கும் அகதிகள்
அகதிகள் முகாமில் திடீரென தீ பற்றிய போது அங்கு அடைக்கப்பட்டிருந்த 60 பேரும் வெளியே செல்ல முயன்றுள்ளனர். ஆனால் அவர்களால் வெளியே செல்ல முடியவில்லை. ஒரே ஒரு கதவு மட்டும் இருந்திருக்கிறது. அதுவும் அடைத்திருந்திருக்கிறது.
@afp
“நாங்கள் கதறினோம். ஆனால் யாரும் கதவை திறக்கவில்லை. தீ பற்றியதில் அங்கு அடைப்பட்டு கிடந்தவர்கள் எரிந்து சாம்பலாகினர்” என தீ விபத்தில் தப்பிய காரபலோ என்பவர் கண்ணீருடன் கூறுகிறார்.
மெக்சிகோ வழக்கறிஞர்கள் தீ விபத்து திட்டமிட்ட கொலையா என விசாரித்து வருவதாகவும், சம்பவம் தொடர்பாக ஐந்து பேரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
@afp
இந்த மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆண் அகதிகள் தீ எரியும் போது அவர்களை தனியாக அடைத்து வைத்தது ஏன் என சந்தேகம் எழுந்துள்ளது, அதே நேரத்தில் பெண் அகதிகள் பக்கத்து அறையிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
யாரும் உதவவில்லை
மெக்சிகோ தீ விபத்து நடந்த இடத்தில் சீசிடீவி காணொளியில் பதியப்பட்ட ஒரு வீடியோவில் தீ பற்றி எரியும் போது உள்ளிலிருந்து ஆட்கள் கதவை தள்ளுகிறார்கள். ஆனால் அங்கே நடந்து சென்ற இரண்டு பொலிஸார்கள் அதனை கண்டு கொள்ளாமல் சென்றுள்ளனர்.
@afp
”நான் பார்க்கையில் தீ பற்றி எரிந்தது. என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அப்போது யாரோ பலமாக கதவை உடைத்தார்கள். தீயணைப்பு படை வீரர்களாக இருக்க வேண்டும். என்னை இழுத்து வெளியே போட்டார்கள். உள்ளே 40க்கும் மேற்பட்டோர் கருகிய நிலையில் இறந்து கிடந்தனர்” என பேசும் போது காரபலோ அழுகிறார்.
கடந்த திங்கட்கிழமை நண்பகல் வேளையில் Caraballo தடுத்து வைக்கப்பட்டு அறையில் அடைக்கப்பட்டார்.
தீயணைப்பு படையால், அவர் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்த்து அவரது மனைவி வெளியில் காத்திருந்தார்.
"அவர்கள் என்னை ஏற்றிய ஆம்புலன்சில் இருந்து என் மனைவியின் அலறல் சத்தம் கேட்டது, பின்னர் நான் சுயநினைவை இழந்தேன்," என்று அவர் கூறியுள்ளார்.