காரில் சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்: மெக்சிகோவில் அதிகரிக்கும் அத்துமீறல்
மெக்சிகோவின் அகாபுல்கோவ்-வில் பத்திரிகையாளர் நெல்சன் மாடஸ் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்
மெக்சிகோவின் தென் மேற்கு மாகாணமான குரேரோ-வின் கடற்கரை ரிசார்ட் நகரான அகாபுல்கோ-வில் சனிக்கிழமையன்று பத்திரிகையாளர் நெல்சன் மாடஸ் சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.
Lo Real de Guerrero என்ற செய்தி தளத்தின் இயக்குநராக உள்ள நெல்சன் மாடஸ் வாகன நிறுத்துமிடத்தில் நின்ற காரின் உள்ளே சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார் என்று மெக்சிகோ செய்திதாள் El Universal தெரிவித்துள்ளது.
மேலும் வடக்கு அகாபுல்கோவின் எமிலியானோ ஜபாடா-வின் அருகே உள்ள பகுதியில் மதியம் 3 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.
நெல்சன் மாடஸ் கடந்த 2017ம் ஆண்டு மற்றும் 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட கொலை தாக்குதலில் இருந்து உயிர் தப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பற்ற நாடு
காணாமல் போன பத்திரிகையாளர் லூயிஸ் மார்ட்டின் சான்செஸ் உடல் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வாரத்திற்கு பிறகு பத்திரிகையாளர் நெல்சன் மாடஸ் மரணம் நிகழ்ந்துள்ளது.
Reuters
பத்திரிகையாளர் நெல்சன் மாடஸ் மரணம் குறித்து குரேரோ மாகாண அட்டர்னி ஜெனரல் அலுவலகம் உரிய பதிலளிக்கவில்லை.
மெக்சிகோவில் ஊழல், போதைப்பொருள் கடத்தல், மற்றும் குற்ற வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், அவை குறித்து விசாரிப்பதில் அதிக ஆபத்து ஏற்பட்டு வருகிறது.
இதற்கிடையில் உலகிலேயே கடந்த ஆண்டு அதிக பத்திரிகையாளர்கள் உயிரிழந்த நாடாக மெக்சிகோ உள்ளது என ஊடக கண்காணிப்பு அமைப்பான ரிப்போர்ட்டர்ஸ் வித் பார்டர்ஸ் அறிக்கைப்படி தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |