மெக்சிகோவில் விமானம் மோதி விபத்து - பயணித்த அனைவரும் உயிரிழப்பு
மெக்சிகோ விமான விபத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளனர்.
மெக்சிகோ விமான விபத்து
மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் உள்ள அகாபுல்கோவில் இருந்து சிறிய ரக செஸ்னா 650 Citation III விமானம் ஒன்று, 8 பயணிகள் மற்றும் 2 விமானிகளுடன் புறப்பட்டது.

மெக்சிகோவில் இருந்து 50 கிமீ தொலைவில் உள்ள டோலுகா விமான நிலையம் அருகே பறந்து கொண்டிருந்த போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனால் விமானத்தை அவசர தரையிறக்கம் செய்வதாக விமான நிலைய கட்டுப்பாட்டு கோபுரத்திற்கு விமானி அவசர செய்தியை அனுப்பிவிட்டு, அருகே உள்ள கால்பந்து மைதானத்தில் தரையிறக்க முயன்றுள்ளார்.
ஆனால் எதிர்பாராத விதமாக விமானம், சான் மேடியோ அடென்கோவில் உள்ள லாரி பராமரிப்பு பட்டறையின் அலுமினிய மேற்கூரையில் விமானம் மோதி, பெரும் தீப்பிளவை உண்டாக்கியது.

இதில், விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது. தற்போது வரை 7 பேரின் உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விமானம் மோதியதில் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால், அந்த பகுதியில் உள்ள சுமார் 130 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |