ரஷ்யாவில் Mi-8 ஹெலிகாப்டர் விபத்து: 22 பேரில் 17 பேரின் உடல்கள் மீட்பு
ரஷ்யாவில் சனிக்கிழமை Mi-8 ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட நிலையில் 17 பேரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர் விபத்து
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் 22 பேருடன் பறந்த Mi-8 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், 17 பேரின் உடலை மீட்பு குழுவினர் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுத்துள்ளனர்.
சனிக்கிழமை 19 சுற்றுலா பயணிகள் மற்றும் 3 விமான குழுவினருடன் பறந்த ஹெலிகாப்டர் சிறிது நேரத்தில் காணாமல் போனதாக அதிகாரிகள் அறிவித்தனர்.
A Mi-8 helicopter with 22 people on board vanished in Russia’s remote Kamchatka region. Nearly 24 hours later, the wreckage was found — no survivors
— NEXTA (@nexta_tv) September 1, 2024
The helicopter suddenly lost contact yesterday morning, and poor visibility hampered rescue efforts. When the wreckage was… pic.twitter.com/u5ZI5E3jfw
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஹெலிகாப்டரின் எச்சங்களை 900 மீட்டர் உயரமுள்ள மலை பகுதியில் மீட்பு குழுவினர் கண்டுபிடித்தனர் என கம்சட்கா கவர்னர் விளாடிமிர் சோலோடோவ் டெலிகிராமில் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அவசரகால அமைச்சகம் வெளியிட்ட வீடியோவில், மரங்களால் சூழப்பட்ட குன்றின் அருகே உள்ள சரிவில் விமான எச்சங்கள் கிடப்பதை பார்க்க முடிகிறது.
An Mi-8 helicopter has disappeared in Kamchatka with 22 people on board
— NEXTA (@nexta_tv) August 31, 2024
The helicopter was en route Vachkazhets volcano - Nikolaevka village, and at the appointed time did not land at the destination point and is not in contact. pic.twitter.com/MZNatiTN6W
அத்துடன் ரேடாரில் இருந்து ஹெலிகாப்டர் விலகிய கடைசி இடத்திற்கு அருகிலேயே விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மீட்பு பணியாளர்கள் விபத்துக்குள்ளான பகுதியை சுற்றி முகாமிட்டுள்ள நிலையில், மீட்பு பணியானது அதிகாலை வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான Mi-8 ஹெலிகாப்டர் சோவியத் கால ராணுவம் ஹெலிகாப்டர் ஆகும், இது ரஷ்யாவில் போக்குவரத்திற்காக பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |