பணியின் போது மரணமடைந்த இந்திய வம்சாவளி மைக்ரோசாப்ட் பொறியாளர்: குடும்பத்தினர் எச்சரிக்கை
பணி நேரத்தில் திடீரென்று மரணமடைந்த மைக்ரோசாப்ட் பொறியாளர் ஒருவரின் குடும்பத்தினர் Silicon Valley நிறுவனங்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மாரடைப்பால் மரணம்
Silicon Valley நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை அதிகமாக வேலை வாங்குவதாகவே அவர்கள் எச்சரித்துள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த 35 வயது பிரதிக் பாண்டே மைக்ரோசாப்ட் வளாகம் ஒன்றில் ஆகஸ்டு 20ம் திகதி முகம் குப்புற விழுந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
மருத்துவ சோதனையில் பிரதிக் பாண்டே மாரடைப்பால் மரணமடைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், உறவினர் மனோஜ் பாண்டே தெரிவிக்கையில், பிரதிக் ஒரு புத்திசாலி, கடின உழைப்பாளி, இரவு முழுவதும் வேலையில் இருப்பதில் பெயர் பெற்றவர் என்றும் கூறினார்.
ஆனால், இப்படியான சூழல் மிக ஆபத்தானது என்றும், அதிகமாக வேலை வாங்குவதும், ஊழியர்களின் மன அழுத்தம் மற்றும் வேலைப்பளுவை சமாளிக்க நிறுவனங்கள் உதவ முன்வர வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
நெருக்கடியான சூழலில் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு உதவ முன்வந்தால், ஒரு உயிரை காப்பாற்ற முடியும் என்றும், ஒரு இழப்பு என்பது அவர்களை நம்பியிருக்கும் மொத்த குடும்பத்திற்கும் பேரிழப்பாக மாறும் என்றும் மனோஜ் பாண்டே குறிப்பிட்டுள்ளார்.
வேலைப்பளு காரணம்
சம்பவத்தன்று, ஆகஸ்ட் 20ம் திகதி சுமார் 8 மணி இரவில் அலுவலகத்தில் நுழைந்த பாண்டே, விடிகாலையில் அலுவலக வளாகத்திலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வேலைப்பளு காரணமாகவே அவர் மரணமடைந்திருக்கலாம் என்றும், அவருக்கு சுகாதார பிரச்சினைகள் எதுவும் இருந்ததாக தகவல் இல்லை என்றும் கூறப்படுகிறது.
அதிகாரிகள் முன்னெடுத்த விசாரணையில், பாண்டேவின் மரணத்தில் சந்தேகம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். பாண்டே சான் ஜோஸ் மாகாண பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். 2020 இல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சேருவதற்கு முன்பு ஆப்பிள், இல்லுமினா மற்றும் வால்மார்ட் லேப்ஸில் பணிபுரிந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |