இத்தாலியில் படகு கவிழ்ந்து புலம்பெயர்ந்தவர்கள் நடுக்கடலில் தத்தளிப்பு: 8 பேர் மாயம்
இத்தாலியின் லம்பேடுசா தீவில் புலம்பெயர்ந்தவர்கள் சென்ற படகு கவிழ்ந்ததில் குழந்தை ஒன்றை உயிரிழந்துள்ளது.
படகு கவிழ்ந்து விபத்து
இத்தாலியின் லம்பேடுசா தீவிற்கு துனிசியாவின் துறைமுக நகரமான ஸ்ஃபாக்ஸில் இருந்து 50க்கும் அதிகமான புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிக் கொண்டு சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
கடலில் மூழ்கிய நபர்களில் சிலர் நீந்தி கரைக்கு சென்றுள்ளனர், மற்றவர்களை கடலோர காவல்படை மற்றும் மீனவர்கள் இணைந்து மீட்டனர்.
மொத்தமாக 42 பேரை கடலோர மீட்பு படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து மீட்டுள்ளனர். அதில் 8 பேர் காணாமல் போய் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படகு கவிழ்ந்ததில் 2 வயது குழந்தை ஒன்று நீரில் மூழ்கிப் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்திற்குள்ளான படகில் புர்கினா, பாசோ, கினியா-பிசாவ் மற்றும் மாலி ஆகிய நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
AFP
இத்தாலியின் லம்பேடுசா தீவு கடந்த சில ஆண்டுகளாக புலம்பெயர்ந்தவர்கள் அதிகம் வருகை தரும் இடமாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |